ஆன்லைன் பாடம் புரியாமல் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- முதல்வரிடம் முதல் பரிசுவாங்கியவர்!
சிவகங்கை: ஆன்லைனில் நடத்தும் பாடங்கள் புரியாததால் சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு மாணவி சுபிக்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசை முதல்வர் எடப்பாடியிடம் பெற்றவர் மாணவி சுபிக்ஷா.
தமிழகம் முழுவதும் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர் கதையாகி வருகிறது. நீட் தேர்வுக்கு முன்பாக ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு மரணங்களைப் போல ஆன்லைன் பாடங்களாலும் தற்கொலைகள் தொடருகின்றன. ஆன்லைன் பாடங்கள் புரியாத காரணத்தால் சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு இறந்திருக்கிறார்.

சிவகங்கை சுபிக்ஷா
சிவகங்கையை அடுத்த திருப்புவனம் செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள் சுபிக்ஷா. இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் அவரது பள்ளியில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தி உள்ளனர்.

மதிப்பெண்கள் குறித்து கவலை
ஆனால் ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களை சுபிக்ஷாவால் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளார். இதில் கடுமையான மன உளைச்சலுக்குள்ளானார் சுபிக்ஷா. இப்படியே நீடித்தால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்துவிடும் எனவும் சுபிக்ஷா கவலைப்பட்டிருக்கிறார்.

தூக்கு போட்டு தற்கொலை
இந்த நிலையில்தான் திங்கள்கிழமை இரவு மாணவி சுபிக்ஷா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர் சுபிக்ஷா. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிசும் பெற்றிருந்தார் சுபிக்ஷா.

ஆன்லைன் பாடம்- கைவிடுக
சுபிக்ஷா போன்ற மாணவர்களால் ஆன்லைன் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியவில்லை. இது மாணவர்களைத் தற்கொலைக்கு தூண்டுகிறது. இதனால் இந்த ஆன்லைன் கல்வி முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் கல்வியாளர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications