வெயிலில் காத்து கிடந்த தவெக தொண்டர்களுக்கு ஏமாற்றம்.. காரைக்குடி பரப்புரையில் பேசாமல் கிளம்பிய விஜய்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: தவெக தலைவர் விஜய் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை, காரைக்குடி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தே விஜய் பிரசார இடத்திற்கு வருகை தந்ததால் விஜய் பிரசாரம் மேற்கொள்ளாமல் கிளம்பிச் சென்றார். விஜய் பரப்புரை மேற்கொள்வார் என காலையில் இருந்து தவெக தொண்டர்கள் வெயிலில் காத்திருந்த நிலையில், அவர் கிளம்பிச் சென்ற சம்பவம் தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியிம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. அனைத்து அரடசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குறுதிகள், பிரசாரம் என அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Karaikudi vijay

விஜய் பிரசாரம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்வதற்காக வருகை புரிந்தார். காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேவர் சிலை முன்பு மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது.

மதுரைக்கு வந்த விஜய்க்கு அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய் மேலூர், திருப்பத்தூர் வழியாக காலை 11.30 மணிக்கு காரைக்குடி வருகை தரவிருந்தார். தொடர்ந்து, காரைக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து வஉசி சாலை, கழனிவாசல், வாட்டர் டேங்க் வழியாக தேவர் சிலை வரை திறந்த வேனில் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிடப்பட்டிருந்தது.

37 நிபந்தனைகள்

அதைத்தொடர்ந்து, மதியம் 12.30 மணிக்கு தேவர் சிலை முன்பு திறந்த வேனில் நின்று தவெக தலைவர் விஜய் பேசவிருந்தார். விஜயின் பிரசாரத்துக்கு போலீஸார் 37 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். எந்த பாதையில் வருகிறாரோ அதே பாதையில் விஜய் திரும்பி செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

விஜய் ரசிகர்கள் விஜயை பார்ப்பதற்கு அதிகளவில் கூட வாய்ப்புள்ளதால், தேவர் சிலை அருகே உள்ள மரங்கள், டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் மீது ஏறி நிற்பதைத் தடுக்கும் வகையில் அவற்றை சுற்றி இரும்புத் தகரங்கள் கொண்டு அடைக்கப்பட்டன. 12.30 மணிக்கு விஜய் பேசுவார் எனறு எதிர்பார்க்கப்பட்ட நிலையில, விஜயின் பரப்புரை தொடர்ந்து தாமதமாகி வந்தது.

மதுரை - காரைக்குடி 100 கி.மீ தூரத்தை கடக்க 3.30 மணி நேரத்திற்கு மேல் விஜயின் வாகன் எடுத்துக் கொண்டதால் தொண்டர்கள், பொதுமக்கள் வெயிலில் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. காலையில் இருந்து கடும் வெயிலில் காத்திருக்கும் தொண்டர்களுக்கு தவெக நிர்வாகிகள் தண்ணீர், குளுக்கோஸ் கொடுத்து வந்தனர்.

ஏற்கனவே பரப்புரை தாமதமாகிக் கொண்டிருந்த நிலையில், வரும் வழியில் திடீரென விஜய் சைக்கிளில் பயணம் மேற்கொண்டார். சற்று நேரத்தில் விஜய் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தே விஜய் பிரசார இடத்திற்கு வருகை தந்ததால் அவரது பிரசாரத்துககு அனுமதி மறுக்கப்பட்டது..

இதனால், காரைக்குடியில் பிரசாரம் மேற்கொள்ளாமலேயே விஜய் கிளம்பிச் சென்றார். விஜய் பரப்புரை மேற்கொள்வார் என காலையில் இருந்து தவெக தொண்டர்கள் வெயிலில் காத்திருந்த நிலையில், அவர் கிளம்பிச் சென்ற சம்பவம் தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியிம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+