சாமியாரை விட்டுட்டு இருக்க முடியலை.. அதான் கணவரை கொன்னுடலாம்னு ஐடியா கொடுத்தேன்.. பதற வைத்த மனைவி!
சாமியாருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்
Recommended Video
சிவகங்கை: "என்னால சாமியாரை விட்டு இருக்க முடியல.. அவருகூட பழக கூடாதுன்னு என் கணவர் சொல்லவும்தான் கை, காலை தனியா வெட்டி எடுக்கலாம்னு ஐடியா தந்தேன்.. நான்தான் கதவை திறந்துவிட்டேன்" என்று கணவரை சாமியாருடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
காரைக்குடி தந்தை பெரியார் நகர் சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் மணிமுத்து. இவருக்கு 51 வயதாகிறது. வெளிநாட்டில் வேலை பார்த்தவர். குடும்பத்துக்காகவே உழைத்து, உழைத்து.. வருஷத்துக்கு ஒருமுறை கூட இவர் ஊருக்கு வருவது அரிது.
இப்படித்தான் 5 வருடமாக ஊர் பக்கமே இல்லாமல் வெளிநாட்டிலேயே இருந்துள்ளார். ஆனால், இவரது மனைவி பூமதியோ, மாந்திரீகம் செய்யும் சாமியாருடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். போனவாரம்தான் மணிமுத்து ஊருக்கு வந்ததும், விஷயத்தை கேள்விப்பட்டு கொதித்து போய், மனைவியை கூப்பிட்டு கண்டித்துள்ளார்.

கள்ளக்காதல்
இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவனை கொலை செய்துவிடும்படி ஐடியா தந்து, அதன்படியே மணிமுத்து விடிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார். கணவன் மாடியில் கொலை செய்யப்பட்ட நேரம், மனைவி வீட்டுக்குள் கமுக்கமாக படுத்து கொண்டார். இதெல்லாம் தெரியவந்ததையடுத்து, அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர் சொன்னதாவது:

சாமியார்
"15 வருஷத்துக்கு முன்பு என் ஊருக்கு சாமியார் வேல்முருகன் குறி சொல்ல வந்தார். அவருக்கு சொந்தஊர் ராமேஸ்வரம். அவரை எனக்கு அப்போதே பிடித்துவிட்டது. அதனால் நெருங்கி பழகினேன். சாமியார் குறி சொல்வதோடு, பரிகார பூஜைகளும் செய்வார். நான் கானாடுகாத்தானில் வசித்து வந்தேன். பிள்ளைகளின் படிப்பை சாக்காக சொல்லி, சாமியாருக்காக காரைக்குடிக்கே சென்றுவிட்டேன்.

தனி வீடு
அடிக்கடி சாமியார் என் வீட்டுக்கு வந்து போக ஒரு தனி வீடு எடுத்து கொண்டேன். இது எங்களுக்கு மேலும் நெருக்கத்தை தந்தது. வெளிநாட்டில் இருந்து என் கணவர் வந்ததும், இதை கண்டித்தார். சாமியார்கூட பழக கூடாது என்றார். இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் கொலை செய்ய முடிவு செய்தேன். சாமியாருடன் இதை பற்றி பேசினேன்.

திட்டம்
இப்படி கொலை செய்ய, சாமியார் 1 மணிக்கே சுடுகாட்டுக்கு சென்று நிர்வாண பூஜை நடத்திவிட்டு, என் வீட்டுக்கு மயானத்தில் உடலை தகனம் செய்யும் ஊழியர்கள் பிரகாஷ்குமார், பிரகாஷ் ஆகியோருடன் விடிகாலை 3 மணிக்கு வந்தார். நான்தான் கதவை திறந்துவிட்டேன்.

குத்தி கொலை
சாமியார் உட்பட 3 பேரும் மொட்டை மாடிக்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த என் கணவனை கழுத்து, உடல், கால், என எல்லா பகுதிகளிலும் கத்தியால் குத்திக்கொலை செய்தனர். அப்போது அவர் சத்தம் போட்டு கத்தி விடக்கூடாது என்பதற்காக, முகத்தில் தலைகாணி வைத்து அமுக்கிவிட்டனர். அதன்பிறகு 3 பேரும் வந்த காரிலேயே தப்பிசென்றனர்" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications