ரோடு பிளந்து.. குபுகுபுவென வந்த வெள்ளை நீர்! பாலா? பாஸ்பரசா? ஆவியை பார்த்து அலறி ஓடிய சிவகாசி மக்கள்
சிவகாசி: சிவகாசியில் சாலை பிளந்து குபுகுபுவென வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம் வெளியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கே திடீரென சாலையில் பெரிய பள்ளம் ஒன்று தோன்றி உள்ளது. அந்த பள்ளத்தில் இருந்து திடீரென பிளவு பெரிதாகி உள்ளது. அதை தொடர்ந்து கழிவு நீர் போல வெளியே வந்துள்ளது.

தண்ணீர் வந்தது: அதை தொடர்ந்து உள்ளே இருந்து சுத்தமான திரவம் வெளியே வந்து இருக்கிறது. இந்த திரவம் நீர் போல தூய்மையாக இருந்துள்ளது. நீண்ட நேரம் திரவம் வந்தபடியே இருந்துள்ளது. அதன்பின் சில மணி நேரங்களில் தண்ணீர் வருவது நின்றுள்ளது. இங்கே தண்ணீர் வரும்போதே மக்கள் அதை பார்க்க கூடிவிட்டனர். பெரும்பாலும் சாக்கடை உடைந்து தண்ணீர் வெளியே வருகிறது . உள்ளே குழாய் உடைந்துவிட்டது என்று நினைத்துள்ளனர்.
புகை வந்தது: அதன்பின்தான் அங்கிருந்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென உள்ளே இருந்து புகை வந்துள்ளது. விடாமல் உள்ளே இருந்து புகை வெளியேறி இருக்கிறது. இதை பார்த்து மக்கள் அங்கே கூட்டமாக குவிந்துவிட்டனர். எதோ வாயு கசிவு ஏற்பட்டுவிட்டது என்பது போல மக்கள் அதை பார்க்க குவிந்துள்ளனர். வெள்ளை நிறத்தில் புகை போல காற்று வெளியே வந்து இருக்கிறது.
வெள்ளை நிற திரவம்: இதை தொடர்ந்துதான் உள்ளே இருந்து வெள்ளை நிற திரவம் ஒன்று வந்துள்ளது. இந்த முறை வந்த வெள்ளை நிற திரவம் பால் போல இருந்துள்ளது. பால் போல அப்படியே வெளியே ஓடி வந்துள்ளது. சூடான பாலை அப்படியே காய்ச்சி ஒரு குழாய் வழியாக அனுப்பினால் எப்படி இருக்கும். அப்படித்தான் இந்த பால் இருந்துள்ளது. இதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அலறிய மக்கள்: இது என்ன திரவம் என்று தெரியாமல் மக்கள் கடுமையாக குழம்பி உள்ளனர். அதோடு உள்ளே இருந்து வரும் ஆவி சுவாசிக்க கூடியதா என்றும் தெரியவில்லை. இந்த ஆவி எங்கிருந்து வருகிறது என்றும் தெரியவில்லை. அதனால் மக்கள் சிலர் அலறியடித்து ஓடி உள்ளனர். விஷவாயு கசிவு என்ற அச்சத்தில் ஓடி உள்ளனர். பலரும் இது பாஸ்பரஸ் திரவமாக இருக்குமோ என்றும் அச்சம் அடைந்துள்ளனர்.
சில வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலியாகினர். அனந்தபூர் மாவட்டத்தில் தாடிபத்திரியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது. விஷவாயு கசிவால் காயமடைந்த மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் இங்கே விஷவாயு கசிவு ஏற்பட்டு உள்ளதோ என்ற அச்சத்தில் இவர்கள் உள்ளனர்.
விசாரணை: இதுவரை அங்கே ஏற்பட்ட வெள்ளை புகை கொண்ட நீர் கசிவிற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. அதோடு உள்ளே இருந்து வரும் ஆவி சுவாசிக்க கூடியதா என்றும் தெரியவில்லை. இந்த ஆவி எங்கிருந்து வருகிறது என்றும் தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கசிவிற்கான காரணம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications