மோடி பக்தி இருக்க வேண்டியதுதான்.. ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ரவுத்திரம் ரொம்ப பயங்கரமா இருக்கே!
சிவகாசி: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை நமக்கு ஒருபக்கம் இருந்தாலும், சில தமிழக அமைச்சர்களின் பேச்சுக்கள் அதைவிட பயங்கரமாகவும், நம் நாடி நரம்புகளில் தேசிய ரத்தம் பாய்ந்து ஓடுவது போலவும் இருக்கிறது.
கூட்டணி உறுதியாகாத வரை மேடைகளில் அதிமுக புகழ் பாடி கொண்டிருந்த அமைச்சர்கள், இப்போது பாஜக, பாமகவையும் லிஸ்ட்டில் சேர்த்துள்ளனர். அதிலும் மோடி நெடி அதிகமாகவே வர ஆரம்பித்துள்ளது.

நேற்று சிவகாசியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, "அதிமுக கூட்டணி ஒரு மங்களகரமான கூட்டணி. திமுகவுடையது மங்கிப்போன கூட்டணி. அது உதிர்ந்து போன கூட்டணி. ஒன்றுக்கும் உதவாத கூட்டணி.
தேசிய பற்றுள்ள மோடி நாட்டின் பிரதமராக திரும்பவும் வரவேண்டும். இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைக்கின்ற கட்சிகளுக்கு நீங்கள் ஓட்டு போடாதீர்கள். இந்திய இறையாண்மைக்காக உழைக்கின்ற அதிமுக, பாஜக, பாமக என்ற மக்கள் நலக்கூட்டணியை ஆதரியுங்கள்.
[Read more: சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியலாக்கும் பாஜக.. 22 எம்.பி சீட் கிடைக்கும் என்கிறார் எடியூரப்பா!]
மோடி கண்ணசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தானே இருக்காது. இந்த விஷயத்தில் அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லை, தமிழகத்தில் ஒவ்வொரு மக்களும், ஒவ்வொரு இளைஞனும் மோடியின் கரத்தை வலுவாக்க தயாராக இருக்கிறான்" என்றார் ஆவேசமாக.
இதே ராஜேந்திர பாலாஜிதான், கஜா புயலின்போது, "பத்து லட்சம் பேர் செத்தால்தான் வருவாரா மோடி என்று இதைவிட ஆவேசத்துடன் அன்று கேட்டார் என்பது நமக்கு ஏனோ இந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வந்து போகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications