சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - தொழிலாளி மரணம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அப்பையநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டாசு ஆலையில் வேறு யாரவது சிக்கியுள்ளார்களா என தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெயில் காலம் என்பதால் விபத்து நிகழ்ந்ததாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆலைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்த சில தினங்களில் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இன்றைய தினம் அப்பையநாயக்கன் பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளர் உயிரிழந்துள்ளார். பட்டாசு ஆலையில் வேறு யாரவது சிக்கியுள்ளார்களா என தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications