நீயும், நானும் வேற இல்லைடா.. கோலி, ராகுலோடு போட்டோ பகிர்ந்த ரோகித்.. அந்த ‛கேப்ஷன்’ தான் ஹைலைட்
சென்னை: வங்காளதேச அணிக்கு எதிரான உலககோப்பை போட்டியில் இந்தியா அசத்தலான வெற்றியை பெற்றது. இந்நிலையில் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருடன் சேர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட போட்டோவை ரோகித் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, அதற்கு கொடுத்த கேப்ஷன் இந்திய ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
இந்தியாவை வீழ்த்தினால் டின்னர் வழங்குவதாக வங்கதேச அணிக்கு பாகிஸ்தான் நடிகை சேகர் சின்வாரி ஆபர் கொடுத்தார். ஆனால் இந்தியாவிடம் வங்கதேசம் தோற்ற நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்தியா இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 4 அணிகளுடன் இந்தியா மோதி உள்ளது.
இந்த 4 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணி மொத்தம் 257 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 41.3வது ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா 48 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி அதிரடியாக ஆடி சதமடித்தார். விராட் கோலி 103 ரன்களும், கேஎல் ராகுல் 34 ரன்களும் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்நிலையில் தான் போட்டியை வெற்றிகரமாக முடித்த பிறகு விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் மைதானத்தில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்தனர். இந்த வேளையில் மைதானத்துக்குள் வந்த ரோகித் ஷர்மா விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோரை கட்டியணைத்து சிரித்தபடி வரவேற்றார். மேலும் ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் ஒன்றாக இருக்கும் போட்டோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
அந்த போட்டோவில் ரோகித் ஷர்மா நடுவில் இருந்தபடி விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோரை அரவணைக்கும் வகையில் அந்த போட்டோ இருக்கிறது. அதில் 3 பேரும் அதிக புன்னகையுடன் உள்ளனர். இந்த போட்டோவை இந்திய ரசிகர்கள் ‛பிக் ஆப் தி டே' என்ற கேப்ஷனில் சமூக வலைதளங்களில் பரப்பினர். இத்தகைய சூழலில் தான் அந்த போட்டோவை ரோகித் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதோடு அந்த பதிவில் அவர் ஒற்றை வார்த்தையை மட்டும் கேப்ஷனாக கொடுத்துள்ளார். ரோகித் ஷர்மா ‛Together' என பதிவிட்டுள்ள அந்த வார்த்தை தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என பொருள்படும்படி அவர் இந்த பதிவை இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.
இந்தியாவை பொறுத்தமட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா இடையே பிரச்சனை இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. இதுபற்றி இருவரும் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவித்தது இல்லை. இருப்பினும் களத்தில் இருவரும் நெருக்கமாக இருப்பதும் அரிதான ஒன்றாகவே இருந்தது.
ஆனால் சமீபகாலமாக விராட் கோலி, ரோகித் ஷர்மா ஆகியோரின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மைதானத்தில் ஒன்றாக இணைந்து டிஸ்கஸ் செய்வது, விக்கெட் விழுந்தால் அதனை சேர்ந்து கொண்டாடுவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் ரோகித் ஷர்மா நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற வகையில் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை பகிர்ந்து இருப்பது இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அதோடு ரோகித் ஷர்மாவின் இந்த பதிவுக்கு தற்போது லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications