டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா.. இந்தியா படுதோல்வி.. பின்னால் உள்ள 7 ஷாக் காரணங்கள்!
லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து உள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணங்கள் உள்ளன.
இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது. கடந்த முறை நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து உள்ளது.
209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. கப்பாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வென்றதை போல வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி துளி அளவு கூட போர்க்குணத்தை காட்டாமல் தோல்வி அடைந்து உள்ளது.
முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் ஸ்மித், ஹெட் இருவரும் அதிரடியாக சதம் அடித்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டிற்கு 469 ரன்களை எடுத்தது. ஹெட் 163, ஸ்மித் 121 ரன்களை எடுத்தனர். இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 26 பந்துக்கு 15 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். 15 பந்துக்கு 13 ரன்கள் எடுத்து சுப்மான் கில் அவுட் ஆனார். 25 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து புஜாரா அவுட் ஆனார். 31 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ஜடேஜா 51 பந்தில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
முதல் இன்னிங்சில் ரஹானே 89, ஜடேஜா 48, ஷர்த்துல் 51 ரன்கள் எடுக்க இந்திய அணி 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ்: இதையடுத்து மீண்டும் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் சரிய லபுசேன் 41 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஸ்டார்க் 41, கேரி 66 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி 270-8 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா 445 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்: இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் ரோஹித் சிறப்பான தொடக்கம் கொடுக்க 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தவறாக அவுட் கொடுக்கப்பட்ட கில் 18, புஜாரா 27 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து இறங்கிய கோலி 44 ரன்கள், ரஹானே 20 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த நிலையில் இன்று பேட்டிங்கை தொடர்ந்தனர்.
பேட்டிங் தொடங்கி சில ஓவர்களில் கோலி 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். போலன்ட் ஓவரில் கேட்ச் கொடுத்து இவர் அவுட் ஆனார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜாவும் போலண்ட் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து ரஹானேவும் 46 ரன்களுக்கு அவுட் ஆக வரிசையாக இந்தியாவின் டெயில் பேட்டிங் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க.. இந்தியா தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணங்கள் உள்ளன.
காரணம் 1 - இந்திய அணியின் அணி தேர்வே தவறானது. பிட்சை பார்த்து அணியை எடுத்ததற்கு பதில் வீரர்களின் முக்கியத்துவத்தை பார்த்திருக்க வேண்டும். அஸ்வின் இல்லாமல் இந்திய அணி திணறுவதாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன. உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலர், டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவான், லெப்ட் பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் அஸ்வினை இந்திய அணி டீமில் எடுக்காதது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. கூடுதல் பேட்டிங் ஆப்ஷனுக்காக இந்திய அணி இப்படி ஷர்த்துல், ஜடேஜாவை எடுத்து அஸ்வினை நீக்கி உள்ளது.
காரணம் 2 - ஓய்வு இல்லாதது முக்கிய காரணம். இந்திய பேட்ஸ்மேன்கள் இப்படி மோசமாக சொதப்பவுதற்கு காரணம் ஐபிஎல்தான் என்று கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சரியான ஓய்வு இல்லாமல் வீரர்கள் ஆடுவது, அதிக பணத்திற்காக பிசிசிஐ தொடர்ந்து வீரர்களை ஆட வைப்பது போன்றவை காரணங்களாக பார்க்கப்படுகிறது.
காரணம் 3 - மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சரியாக ஆட இந்திய அணியில் முன்பு பண்ட் இருந்தார். அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் இருந்தார். இப்போது இரண்டு பேருமே காயம் காரணமாக ஆடவில்லை.
காரணம் 4 - டாப் ஆர்டரில் புஜாரா தொடர்ந்து சொதப்பிய நிலையில் இந்த போட்டியிலும் சொதப்பி உள்ளார். ஐபிஎல்லில் புஜாரா ஆடவில்லை. அவர் அந்த காலம் முழுக்க கவுண்டியில் டெஸ்ட் ஆடினார். இங்கிலாந்து பிட்சில் பழக்கம் உள்ளது. அதேபோல் மற்ற நேரங்கள் முழுக்க டெஸ்ட் போட்டிகளுக்கே தயார் ஆனார். ஆனால் இவ்வளவு செய்தும் அவர் மோசமாக ஆடி உள்ளார். கடைசியாக அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியது 2022 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் மட்டுமே. இடையில் எங்கும் புஜாரா சரியாக ஆடவில்லை
காரணம் 5 - ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினை நீக்கியதை தவிர்த்து இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்றில் இந்திய அணி சொதப்பி உள்ளது. அதன்படி அங்கே வரும் நாட்களில் வெயில் அடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் 3வது நாளில் இருந்து பிட்ச் மேலும் காய்ந்து போய் ஸ்பின் பவுலிங் செய்ய சாதகமாக மாறும். அதோடு பாஸ்ட் பவுலர்கள் அந்த கண்டிஷனில் பவுலிங் செய்வது சிரமமான காரியம் ஆகும். இதை கணிக்க இந்திய அணி தவறி உள்ளது. இந்திய அணியில் இரண்டு ஸ்பின் பவுலர்கள் இருந்திருந்தால்.. கடைசி 3 நாட்கள் அணிக்கு உதவியாக இருந்திருக்கும்.
காரணம் 6 - ரோஹித் கேப்டன்சி மிக மோசமாக இருந்தது. பீல்டில் ரோஹித் என்ன நடக்கிறதே என்ற க்ளூ இல்லாமல் இருந்தது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அஸ்வினை அணியில் எடுத்து இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
காரணம் 7 - பொதுவாக கோலி கேப்டனாக இருந்த சமயத்தில் விக்கெட்டே செல்லவில்லை என்றாலும் தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கு பிரஷர் கொடுப்பார்.பாஸ்ட் பவுலர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து பேட்ஸ்மேன்களுக்கு பிரஷர் போட வைப்பார். அவருக்கு கீழ் பாஸ்ட் பவுலர்கள் செயல்பட்ட விதமே வேறு மாதிரி இருந்தது. பாண்டிங் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய பவுலர்கள் இருந்தது போல கோலி கேப்டன்சியில் இந்திய டெஸ்ட் பவுலர்கள் இருந்தனர்.ஆனால் நேற்று ரோஹித்திற்கு கீழ் பாஸ்ட் பவுலர்கள் காலையிலேயே உப்மா சாப்பிட்டுவிட்டு வந்தவர்கள் போல மசமசவென்று இருந்தனர். அவர்கள் பெரிதாக ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு பிரஷர் போடவில்லை.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications