‛கோலி’ மீதான அன்பு.. எதிர்த்த அங்கிளுக்கு பாகிஸ்தான் ரசிகை கொடுத்த பதிலடி! க்யூட் வீடியோ! செம
சென்னை: ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ‛‛விராட் கோலி தான் தனது பேவரைட்' பிளேயர் எனக்கூறிய நிலையில் குறுக்கீட்டு பேச முயன்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரசிகரை ‛அங்கிள்' என அழைத்து தனது கன்னத்தை காட்டி கூறிய அந்த ஒற்றை வார்த்தை அனைவரிடமும் பாராட்டை குவித்து வருகிறது.
கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்வது என்பது எப்போதும் ஹைவோல்டெஜ் மேட்சாகவே இருக்கும். எப்படியாவது பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் இந்திய வீரர்களும், , இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என பாகிஸ்தான் வீரர்களும் கடைசி வரை போராடுவார்கள்.

இருநாட்டு வீரர்களும் மல்லுக்கட்ட மைதானத்தில் ரசிகர்கள் மனதிலும் தங்கள் நாடு தான் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கம் மேலோங்கி இருக்கும். இதனால் தான் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இப்படியான சூழலில் தான் நேற்று ஆசியக்கோப்பை தொடருக்கான போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இலங்கையில் இந்த போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. கேப்டன் ரோகித் சர்மா 11 ரன், விராட் கோலி 4 ரன், ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன், கில் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து சரிவில் இருந்து மீட்டனர். இஷான் கிஷான் 82 ரன்கள் , ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 48.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 267 ரன்களை இலக்காக வைத்து பாகிஸ்தான் களமிறங்க தயாரான நிலையில் மழை பெய்தது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்து வழங்கப்பட்டது. இதனால் இரு அணி ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர். இந்த தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் நேபாளத்துடன் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அந்த அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்தியா ஒரு புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் நாளை நோபாளத்துடனான போட்டியில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த போட்டி முடிந்த பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது வெளியே இருநாட்டு ரசிகர்களிடம் சிலர் பேட்டி எடுத்தனர். அப்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூறும்போது, ‛‛விராட் கோலி என்னுடைய பேவரைட் பிளேயர். அவரது தீவிரமான ரசிகை நான். அவரை பார்ப்பதற்காக தான் இங்கு வந்தேன். இந்த போட்டியில் சதமடிப்பார் என நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் அவரை பார்த்தது மகிழ்ச்சியே'' என்றார்.
இதை வேளையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நீங்கள் விராட் கோலிக்கு ஆதரவாக இருக்கிறீர்களே?என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அந்த இளம்பெண் தனது கன்னத்தை (ஒரு கன்னத்தில் பாகிஸ்தான் கொடி, இன்னொரு கன்னத்தில் இந்தியாவின் தேசியக்கொடி வரையப்பட்டு இருந்தது) காண்பித்தார்.
அதோடு ‛‛விராட் கோலியை எனக்கு பிடிக்கும்' என பதிலளித்தார். இந்த வேளையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தலையை நீட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்றார். அப்போது அந்த இளம்பெண், ‛‛அங்கிள். நம் அண்டை நாட்டுக்காரர்களை நேசிப்பது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல'' எனக்கூறி அவருக்கு பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து அவரிடம் ‛‛விராட் கோலி அல்லது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் உங்களின் விருப்பம் யாராக இருக்கும்'' என கேட்கப்பட்டது. அதற்கு அந்த ரசிகை ‛விராட் கோலி'' எனக்கூறினார். இந்த பதிலை கேட்டவுடன் அவரை சுற்றியிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் கூச்சலிட்டனர்.
ஆனால் அதனை சற்றும் கண்டுக்காத பாகிஸ்தான் இளம் ரசிகை வெற்றியின் அடையாளமாக 2 விரல்களை காண்பித்து க்யூட்டாக சிரித்தபடி போஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த இளம்பெண்ணுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
வெறும் 61 இன்னிங்ஸ் தான்.. சுப்மன் கில்னா சும்மாவா.. விராட் கோலி சாதனையை சரித்த பிரின்ஸ்! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
யாராவது அந்த பையனை கொஞ்சம் நிப்பாட்டுங்கப்பா.. 15 வயசுல இவ்வளவு கோபம் ஆகாது வைபவ் சூர்யவன்ஷி! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications