பெரிய அச்சுறுத்தலே இதுதான்..இந்திய அணிக்கு காத்திருக்கும் 4 பெரிய சவால்கள்.. திமிறி எழும் பாகிஸ்தான்
சென்னை: இன்று நடக்க உள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 ஆட்டத்தில் இந்திய அணிக்கு 4 முக்கியமான சவால்கள் உள்ளன.
ஆசிய கோப்பை 2023 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி தற்போது இலங்கை சென்றுள்ளது. இந்திய அணி வீரர்கள் தற்போது தொடருக்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வரும் இன்று நடக்க உள்ளது. இதனால் ஆசிய கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. ஆசிய கோப்பை தொடர் இந்த முறை 50 ஓவர் பார்மெட்டில் நடக்க உள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியாக இருக்கும். முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொள்ள இந்திய அணிக்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக இருக்கும்.
இந்த தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் மாறி மாறி நடக்க உள்ளது. இந்திய அணி ஆடும் போட்டிகள் எல்லாம் இலங்கையில்தான் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் 2023 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி குழுவை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.
அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
சவால்: பின்வரும் விஷயங்கள் இந்த தொடரில் இந்திய அணிக்கு பிரஷர் கொடுப்பதாக மாறலாம்.
1. பாகிஸ்தானில் காயத்திற்கு பின் ஷாகீன் அப்ரிடி பெரிதாக பார்மிற்கு வரவில்லை. ஆனால் இந்த தொடரில் முதல் போட்டியிலேயே நேபாளத்திற்கு சிறப்பாக ஆடினார். அவரின் ரிதம் மீண்டும் வந்துவிட்டதாக தோன்றுகிறது. முக்கியமாக் அவரின் வேகம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.
2.பாபர் ஆஸம் முழு பார்மில் இருக்கிறார். அவர் பேட்டிங் பார்மிங் உச்சத்தில் இருக்கிறார். நேபாளத்திற்கு எதிரான போட்டி என்றாலும் முதல் போட்டியில் அவர் ஆடிய ஷாட்களை பார்க்கும் போது... இந்திய அணி அவருக்கு எதிராக தனியாக திட்டங்களை வகுக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
3. பாகிஸ்தானின் பேட்டிங் ஆர்டர் நன்றாக உள்ளது. டாப் ஆர்டரில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் பேட்டிங் ஆர்டரை மேலும் வலுவாக்கி உள்ளது.
4. ஷதாப் கான் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளார். நேற்று அவரின் பவுலிங் சிறப்பாக இருந்தது. இவரை சமாளிக்கவும் இந்திய அணி தயாராக இருக்க வேண்டும்.
என்ன நடந்தது?: முதல் போட்டியில், பாகிஸ்தான் நேபாளம் இடையே நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடந்த சில சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 342-6 ரன்கள் எடுத்தது.
முக்கியமாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 151 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் இப்திகார் 109 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் ரிஷ்வானும் 44 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இறங்கிய நேபாளம் அணி வெறும் 23.4 ஓவரில் 104-10 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications