இந்த டீமை இறக்குன்னா ஆட்டம் தீயா இருக்குமே! பாகிஸ்தானை எதிர்கொள்ள போகும்.. இந்திய டாப் ஆர்டர் எது?
சென்னை: பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை களமிறங்க போகும் இந்திய அணி எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆசிய கோப்பை தொடர் இந்த முறை 50 ஓவர் பார்மெட்டில் நடக்க உள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியாக இருக்கும். முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொள்ள இந்திய அணிக்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக இருக்கும்.

இந்த தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் மாறி மாறி நடக்க உள்ளது. இந்திய அணி ஆடும் போட்டிகள் எல்லாம் இலங்கையில்தான் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
17 பேர் கொண்ட அணி: அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியின் இந்த அறிவிப்பு பல்வேறு விவாதங்களை கேள்விகளை எழுப்பி உள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மேட்ச்: இந்த நிலையில்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் வரும் சனிக்கிழமை நடக்க உள்ளது.
ஆடும் 11 பேர்: இந்த போட்டியில் இந்திய அணியில் ஆடும் 11 பேர் வீரர்கள் பெரும்பாலும், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.
அல்லது ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
இல்லையென்றால் தொடக்க வீரராக கே. எல் ராகுல் இணையவும் வாய்ப்புகள் உள்ளன. காயத்தில் இருந்து முழுமையாக விடுபடாத கே. எல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்திய அணியில் எந்த பார்மட்டிலும் சரியாக ஆடாத கே. எல் ராகுலை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாக வைக்கப்பட்டு வருகின்றன.
அவருக்கு தற்போதும் காயம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. பாகிஸ்தான் பவுலிங் வலிமையாக உள்ளது, பாகிஸ்தானில் காயத்திற்கு பின் ஷாகீன் அப்ரிடி பெரிதாக பார்மிற்கு வரவில்லை. ஆனால் இந்த தொடரில் முதல் போட்டியிலேயே நேபாளத்திற்கு எதிராக நேற்று சிறப்பாக ஆடினார். அவரின் ரிதம் மீண்டும் வந்துவிட்டதாக தோன்றுகிறது. முக்கியமாக அவரின் வேகம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.
ஷதாப் கான் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளார். நேற்று அவரின் பவுலிங் சிறப்பாக இருந்தது. இவரை சமாளிக்கவும் இந்திய அணி தயாராக இருக்க வேண்டும். இதனால் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக இருக்க வேண்டும்.
பெரும்பாலும் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்தியாவின் டாப் மற்றும் மிடில் ஆர்டரில் ஆட வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications