"சுயமரியாதை" யார்க்கர்.. இந்தியா இப்படி அடிக்கும்னு பாகிஸ்தான் நினைக்கல.. மொத்த நாடே கிளீன் போல்ட்
டெல்லி: ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, கோப்பையையும் பதக்கங்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து பெற மறுத்தது. பாகிஸ்தான் இந்திய அணியிடம் கிரிக்கெட்டில் மட்டும் தோற்கவில்லை.. களத்திற்கு வெளியேவும் தோல்வி அடைந்துவிட்டது. உங்க கப்பும் வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம் என்று சுயமரியாதையுடன் இந்தியா வெளியேறும் என்பதை பாகிஸ்தான் எதிர்பார்த்து இருக்காது.. ஆனால் அதுதான் நேற்று களத்தில் நடந்தது.
ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகு, இந்திய அணி கோப்பையை பாகிஸ்தான் அமைச்சரிடம் வாங்க மறுத்தது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மற்றும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியை இந்திய அணி களத்தில் உறுதியாக நிராகரித்தது. இந்த அசாதாரண சூழ்நிலை பரிசு வழங்கும் விழாவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்திய வீரர்கள் கோப்பையின்றி.. சுயமரியாதையுடன் வெற்றியை கொண்டாடினர்.

இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்
இந்திய அணியின் இந்த நடவடிக்கையை பாஜகவும், சில காங்கிரஸ் தரப்பினரும் கூட தீவிரமாக ஆதரித்து உள்ளனர். நக்வி பாகிஸ்தானின் அமைச்சர். பல இடங்களில் இந்தியாவிற்கு எதிராக பேசி இருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் மோதல் சமயத்தில் இந்தியாவை கடுமையாக கண்டித்து உள்ளார். அப்படிப்பட்ட நபரிடம் கோப்பை வாங்க சொன்னால்.. இந்திய அணி எப்படி வாங்கும்.
இந்தியாவை கடுமையாக பல இடங்களில் தாக்கி பேசிய ஒருவரிடம் கோப்பையை கொடுத்து வாங்க சொன்னால் எப்படி வாங்குவது?
இந்தியா அபரா வெற்றி
ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் 69 ரன்களை எடுத்த திலக் வர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், போட்டிக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்துவிட்டது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்திய அணி கோப்பையை வென்றுவிட்டது. ஆனால் அந்த கோப்பையை நிர்வாக ரீதியாக கொடுக்க வேண்டும் என்ற அருகதை கூட இல்லாமல் அந்த கோப்பையை தூக்கிக்கொண்டு ஓடி இருக்கிறார் மொஹ்சின் நக்வி.
பாகிஸ்தானுக்கு வலுக்கும் கண்டனங்கள்
பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா இதை கண்டித்து பேசுகையில், "நம் நாட்டுக்கு எதிராகப் போர் தொடுக்கும் நாட்டின் பிரதிநிதியிடம் இருந்து இந்திய அணி கோப்பையை ஏற்க முடியாது. அதிலும் அவர் கோப்பையை நிர்வாக ரீதியாக கொடுக்க வேண்டும் என்று கூட நினைக்காமல்.. அதை தூக்கிக்கொண்டு வெளியேறி உள்ளார். இதுதான் கிரிக்கெட்டில் நீங்கள் நடந்து கொள்ளும் விதமா?" என்று கடுமையாக கண்டித்து உள்ளார்.
நக்வி கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்துச் சென்ற செயலை சைகியா கண்டித்தார். நவம்பர் மாதம் நடைபெறும் ICC மாநாட்டில் நக்விக்கு எதிராக தீவிரமான மற்றும் வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆசிய கோப்பை 2025 கோப்பையை பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ACC தலைவரிடம் இருந்து வாங்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். ஆனால், அதற்காக அந்த நபர் கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்துச் செல்வார் என்று அர்த்தமல்ல. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மோசமானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. விளையாட்டில் இப்படி செயல்பட கூடாது. கோப்பையையும் பதக்கங்களையும் விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.. ஆனால் அவர் அப்படி செய்தாலும் கூட.. கண்டிப்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.
சைகியா மேலும் கூறுகையில், "நவம்பர் மாதம் துபாயில் ICC மாநாடு நடக்க உள்ளது. அடுத்த மாநாட்டில் ACC தலைவரின் இந்த செயலுக்கு எதிராக மிக தீவிரமான மற்றும் வலுவான எதிர்ப்பை தெரிவிக்கப் போகிறோம், என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications