பிசிசிஐ இன்னுமா திருந்தல.. சாம்சன், உம்ரானுக்கு வாய்ப்பே இல்லை! சொதப்பிய ஸ்கைக்கு கேப்டன் புரொமோசன்
சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமித்து உள்ளதும், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை சேர்க்காததும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற பரபரப்பு அடங்குவதற்கு இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடும் வீரர்களை அறிவித்து உள்ளது பிசிசிஐ. வரும் நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் இந்த டி20 தொடரில் 5 போட்டிகள் நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு தற்போது டி20 போட்டிகளுக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் நடைபெறுகிறது.

சூர்யகுமாருக்கு புரொமோசன்: இதில் இந்திய அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் 3 போட்டிகளுக்கு துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்றும், அடுத்த 2 போட்டிகளுக்கு ஸ்ரேயஸ் ஐயர் துணை கேப்டனாக இருப்பார் என்றும் பிசிசிஐ அறிவித்து உள்ளது. பேட்ஸ்மேன்கள் திலக் வர்மா, யஷஷ்வி ஜெய்ஷ்வால், விக்கெட் கீப்பர்கள் இஷான் கிஷன் மற்றும் ஜிதேஷ் சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஆல்ரவுண்டர் ஷிவம் துபே, சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
உலகக்கோப்பையை ஆடிய வீரர்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி, முஹம்மது ஷமி, ஜடேஜா, சிராஜ், குல்தீப் யாதவ், சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அணி தேர்வு குறித்து கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவை கேப்டனாக தேர்வு செய்தது பற்றி பலர் விமர்சித்து வருகிறார்கள். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சூர்ய குமார் யாதவின் ஆட்டம் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கேப்டன் பதவியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒதுக்கப்படும் சஞ்சு சாம்சன்: அதேபோல், சில வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்படாததும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. உலகக்கோப்பை தொடரிலேயே சூர்யகுமாருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்திருக்க வேண்டும் என்ற விமர்சனம் உள்ள நிலையில், இந்த தொடரில்கூட சஞ்சு சாம்சனை அணி பிசிசிஐ சேர்க்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
ஐபிஎலில் பல ஆண்டுகள் கேப்டன் செய்த அனுபவம், சிறப்பான விக்கெட் கீப்பிங் திறன், ஓபனின் தொடங்கி பினிஷிங் வரை எந்த இடத்தில் விட்டாமல் சிறப்பாக பேட்டிங் செய்யும் ஆற்றல் அவருக்கு உள்ளது. வாய்ப்பு கிடைத்த சில போட்டிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த நல்ல ஆவரேஜை அவர் வைத்து உள்ளார். ஆனால், அவரை அணி நிர்வாகம் தேர்வு செய்யாததற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
உம்ரான் மாலிக் எங்கே?: அதேபோல், 150 கிமீ வேகத்தில் வீசும் பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்படாததும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் தங்கள் திறனை நிரூபித்து உள்ளார்கள். ஆனால், ஐபிஎலில் கூட சுமாராக பந்துவீசிய முகேஷ் குமாரை எதற்கு தொடர்ந்து இந்திய அணியில் தேர்வு செய்கிறார்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.
இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கை இதுபோன்ற 2 ஆம் தர இந்திய அணியில் சேர்த்து அவரது திறனை பட்டைத் தீட்டினால் இனி வரக்கூடிய ஆண்டுகளில் அவரது வேகத்துடன் நல்ல அனுபவமும் சேர்ந்த சிறப்பான பந்துவீச்சாளராக வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, சாம்சன், உம்ரான் மாலிக் போன்ற வீரர்களை பிசிசிஐ ஓரம் கட்டி வருகிறது.
இவர்களை போல் தமிழ்நாடு வீரர்களான சாய் சுதர்ஷன், சாய் கிஷோர், லக்னோ அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான், குஜராத் அணியில் ஆடிய ஆல்ரவுண்டர் ராகுல் தெவாட்டியா, வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ஆகியோர் எங்கே என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications