Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயிச்ச பின்னரும் ரச்சின் மீது வன்மத்தை கொட்டும் ரசிகர்கள் .. "தல" தோனி காரணமாம்! என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மும்பையை வீழ்த்தியது. ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், வெற்றி பெற்றவுடன் சிஎஸ்கே ரசிகர்களே ரச்சினை திட்ட தொடங்கிவிட்டனராம். இது குறித்து நாம் பார்க்கலாம்.

ஐபிஎல் 2025 திருவிழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. நாட்டின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி மும்பையை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

ipl 2025 csk MI 2025

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் போட்டி என்றாலே தாறுமாறாக அடிப்பது என்றாகிவிட்ட நிலையில், அதற்கு மாறாக நேற்றைய போட்டியில் இருந்தது. பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பவுலர்களின் பங்கும் நேற்று முக்கியத்துவம் பெற்றது. நேற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 155 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 25 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். சிஎஸ்கே வீரர் நூர் அகமது 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.

ரச்சின் ரவீந்திரா

அடுத்து பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான ரச்சின் ரவீந்திரா நின்று விளையாடினார். ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் ரச்சின் நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று சென்னை வெற்றியை உறுதி செய்தார். கடைசி ஓவரை மிட்செல் சாண்ட்னர் வீசிய நிலையில், அதன் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு சென்னை அணியினை வெற்றி பெற வைத்தார். ஆனால், இந்த சிக்சரை வைத்தே சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் ரச்சினை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

சிஎஸ்கே ரசிகர்கள்

அணியை வெற்றி பெற வைத்ததற்கு எதற்காக திட்டுகிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ரச்சின் சிக்சர் அடிக்கும்போது மறுபுறம் நான் ஸ்டிரைக்கர் எண்ட்டில் இருந்தவர் தல தோனி. அவர் 19ஆவது ஓவரில் களத்தில் இறங்கினார். முதல் இரண்டு பந்துகள் டாட் வைத்திருந்தார். 20வது ஓவரில் ரச்சின் சிங்கிள் எடுத்து தந்திருக்க வேண்டும் தல தோனி இன்னிங்ஸை முடித்திருக்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் திட்டி வருகிறார்கள்.

ரச்சின் ரவீந்திரனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக சிஎஸ்கே ரசிகர்கள் திட்டி வருகிறார்கள். நீங்கள் ஏன் தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை என்றும் தல தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் தப்பு செய்துவிட்டீர்கள் என்றும் திட்டியுள்ளனர். இன்னும் சிலர் சிஎஸ்கே ரசிகராக வெட்கப்படுகிறேன் என்றெல்லாம் கூட பதிவிட்டுள்ளார்.

பாராட்டும் குவிகிறது

அதேநேரம் பல சிஎஸ்கே ரசிகர்கள் ரச்சினின் ஆட்டத்தைப் பாராட்டியுள்ளனர். அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற வீரரை இதுபோல திட்டுவது சரியான போக்கு இல்லை என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள். மேலும், ரச்சினை திட்டும் யாரும் சிஎஸ்கே ரசிகர்கள் இல்லை.. வேண்டும் என்றே சிலர் இதுபோல செய்கிறார்கள் என்பது போன்ற கமண்டுகளையும் பார்க்க முடிகிறது.

ரச்சின் என்ன சொல்கிறார்

முன்னதாக நேற்றைய போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில், தல தோனி களமிறங்கியபோது தானும் மெய்மறந்து போனதாக ரச்சின் ரவீந்திரா கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், "தோனி களமிறங்கிய போது விசில் சத்தம் பறந்தது.. அதைப் புறக்கணித்து ஆட்டத்தில் கவனம் செலுத்துவது கஷ்டம் தான். முதல் முறையாக அவருடன் பேட்டிங் செய்தது மறக்க முடியாது. அவர் ஒரு ஜாம்பவான்.. மக்கள் அவரை விரும்புகிறார்கள்.

நான் அவருக்கு [ஸ்ட்ரைக்] கொடுப்பேன். அவர் ஆட்டத்தை முடிப்பார் என்றே பலரும் நினைத்திருந்தனர். ஆனால், அதை நானே செய்துவிட்டேன். அவர் சிஎஸ்கே அணிக்காக ஏற்கனவே பல ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். வரும் காலங்களிலும் நிச்சயம் நிறையப் போட்டிகளை முடிக்கப் போகிறார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+