அந்த 2 டெல்லி பவுலர்கள்.. சமாளித்துவிட்டால் சிஎஸ்கே அணியின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது!
சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றி தொடக்க வீரர் ராகுல் திரிப்பாட்டி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சிஎஸ்கே அணி வெற்றிபெற முடியும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் மிட்சல் ஸ்டார்க் மற்றும் குல்தீப் யாதவ் இருவரின் பந்துகளை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நாளை நடக்கவுள்ள போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. டெல்லி அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் அபார வெற்றியை பெற்றிருக்கிறது. அதேபோல் சிஎஸ்கே அணி கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்?
இந்த நிலையில் சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கான சூழல் அமைந்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடப்பதால், சிஎஸ்கே அணி கூடுதல் எச்சரிக்கையாக விளையாடும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் மோசமாக இருப்பதால், இம்முறை டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியின் பலமான பேட்டிங்
ஆனால் டெல்லி அணியின் பேட்டிங் வரிசை கூடுதல் பலத்துடன் அமைந்துள்ளது. ஏனென்றால் மெக்கர்க், டூ பிளசிஸ், கேஎல் ராகுல், அஷுதோஷ் சர்மா, அபிஷேக் போரெல் உள்ளிட்ட அனைவருமே ஸ்பின்னர்களை கடுமையாக அட்டாக் செய்யக் கூடியவர்கள். அதிலும் கேஎல் ராகுல் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவருமே நின்ற இடத்தில் இருந்து எளிதாக சிக்ஸ் அடிக்க முடியும்.
மிட்சல் ஸ்டார்க் சிக்கல்
இதனால் பவுலர்கள் கொஞ்சம் மாற்று திட்டங்களுடன் களமிறங்குவது சிஎஸ்கே அணிக்கு நல்லது. அதேபோல் டெல்லி அணியின் 2 பவுலர்களை மட்டும் சிஎஸ்கே அணி சமாளித்துவிட்டால், எளிதாக வெல்ல முடியும். அந்த பட்டியலில் முதலில் இருப்பவர் மிட்சல் ஸ்டார்க். ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு இடதுகை பேட்ஸ்மேன்களை எதிர்கொள்வதில் சிரமம் உள்ளது.
பொறுப்புடன் ஆடுவாரா ராகுல் திரிப்பாட்டி?
ஏற்கனவே மிட்சல் ஸ்டார்க் அபார ஃபார்மில் இருப்பதால், அவரை அட்டாக் செய்கிறேன் என்று முடிவு எடுத்து விக்கெட்டை பறிகொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ராகுல் திரிப்பாட்டி கொஞ்சம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே, ருதுராஜ் கெய்க்வாட் எந்த அழுத்தமும் இல்லாமல் பேட்டிங் செய்ய முடியும்.
குல்தீப் யாதவை சமாளிக்க முடியுமா?
அதேபோல் டெல்லி அணியின் நட்சத்திர ஸ்பின்னரான குல்தீப் யாதவை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் கவனமாக கையாள வேண்டும். ஏனென்றால் குல்தீப் யாதவ் அபார ஃபார்மில் இருப்பதோடு, சேப்பாக்கம் மைதானத்தில் அவரின் பந்துகள் எந்தப் பக்கம் திரும்பும் என்பதை கணிக்க முடியாது. இதனால் செட்டிலான பின் அவரை அட்டாக் செய்தால் மட்டுமே சிஎஸ்கே அணியால் ரன்களை சேர்க்க முடியும்.












Click it and Unblock the Notifications