CSK vs DC: ஹேமங் பதானி எடுத்த முடிவு.. சேப்பாக்கம் மைதானத்தில் ஓங்கிய டெல்லி கை.. காரணமே இதுதான்!
சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி எடுத்த முக்கியமான முடிவு அந்த அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. டெல்லி அணியின் தொடக்க வீரரான டூ பிளசிஸ்-க்கு பதிலாக சேப்பாக்கம் மைதானத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய கேஎல் ராகுலை தொடக்க வீரராக அனுப்பியது அந்த அணிக்கு முன்னிலையை கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 51 பந்துகளில் 77 ரன்களை விளாசி அசத்தினார். கடைசி 5 ஓவர்களில் டெல்லி அணி 45 ரன்களை மட்டுமே சேர்த்தது.

சிஎஸ்கேவுக்கு சிக்கல்
சிஎஸ்கே அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும், பதிரானா, கலீல் அஹ்மட் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். கடைசி நேரத்தில் சிஎஸ்கே பவுலர்கள் சிறப்பாக கம்பேக் கொடுத்தாலும், முதல் இன்னிங்ஸ் முடிவில் டெல்லி அணியின் கைகளே ஓங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 2019ஆம் ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணி 180 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்து வென்றதே கிடையாது.
ஹேமங் பதானி எடுத்த முடிவு
டெல்லி அணியின் சிறந்த பேட்டிங்கிற்கு பயிற்சியாளர் ஹேமங் பதானியின் முடிவு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் சேப்பாக்கம் பிட்சை பற்றி மேத்யூ ஹெய்டன் பேசுகையில், பார்ட்னர்ஷிப்-களே இந்த பிட்சில் உங்களுக்கு ரன்களையும், வெற்றிகளையும் கொடுக்கும் என்று தெரிவித்திருந்தார். அதற்கேற்ப திடீரென கேஎல் ராகுலை டெல்லி அணி தொடக்க வீரராக அனுப்பியது.
டூ பிளசிஸ் நீக்கம் ஏன்?
இத்தனைக்கும் கடந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி டூ பிளசிஸ் அரைசதம் விளாசி இருந்தார். சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக விளையாடிய அனுபவமும் டூ பிளசிஸ்-யிடம் இருந்த போதும், டெல்லி அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி அவரை சேர்க்க வேண்டாம் என்று முடிவை எடுத்து, சிறந்த ஸ்கோரை பதிவு செய்ய காரணமாக அமைந்துள்ளார்.
கேஎல் ராகுலின் பணி
அதேபோல் கேஎல் ராகுலுக்கு தொடக்கம் முதலே பார்ட்னர்ஷிப்பை உருவாக்கும் பணிகளே கொடுக்கப்பட்டது. அவருடன் ஆடிய அபிஷேக் போரெல், அக்சர் படேல், சமீர் ரிஸ்வி, ஸ்டப்ஸ் என்று அனைவருமே தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முயற்சித்தனர். அதேபோல் கேஎல் ராகுலும் செட்டிலான பின் எளிதாக அதிரடிக்கு திரும்பினார்.
சேப்பாக்கம் மைதானம்
அதேபோல் வெறும் 3 வெளிநாட்டு வீரர்கள் போதும் என்று ஹேமங் பதானி முடிவு செய்தது பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தது. ஆனால் சேப்பாக்கம் மைதானத்தை ஹேமங் பதானி நன்றாக அறிந்தவர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளராக ஏராளமான போட்டிகளில் ஆடி இருக்கிறார். இதனால் பவுலிங்கிலும் டெல்லி அணிக்கான திட்டத்தை தெளிவாக போட்டு கொடுத்திருப்பார் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications