பாராட்டிய அடுத்த நொடி.. நீட்டா அம்பானி காலில் விழுந்து ஆசீர்வாதம்.. இளம் வீரரை கிண்டலடித்த SKY!
சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலாக பவுலிங் செய்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணியின் இளம் வீரர் விக்னேஷ் புத்தூரை அந்த அணியின் உரிமையாளரான நீட்டா அம்பானி பாராட்டியுள்ளார். அவர் பாராட்டிய சில நொடிகளில், அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. அப்போது கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு நன்றி சொல்ல, அப்போது சூர்யகுமார், கொஞ்சம் அமைதியா இரு தம்பி என்று ஜாலியாக கிண்டல் செய்தார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை பார்ப்பதற்காக மும்பை அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானி சென்னை வந்திருந்தார். இதனால் மும்பை அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இருந்தாலும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய மும்பை அணியின் அறிமுக வீரர் விக்னேஷ் புத்தூர் 4 ஓவர்களில் 32 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகிய மூவரின் விக்கெட்டையும் வீழ்த்தி மும்பை அணி போராடுவதற்கு வழிவகுத்து கொடுத்தார்.
மும்பை அணி தோல்வியடைந்தாலும், விக்னேஷ் புத்தூர்-க்கு வாய்ப்பளித்த அந்த அணி நிர்வாகத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல் அவர் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்த மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்களையும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் மும்பை அணியின் ஓய்வறையில் நீட்டா அம்பானி உரையாற்றி விக்னேஷ் புத்தூர்-க்கு விருது வழங்கி இருக்கிறார்.
அதில் முதல் போட்டியில் சிறந்த பவுலருக்கான விருது விக்னேஷ் புத்தூர்-க்கு வழங்கப்படுகிறது என்று நீட்டா அம்பானி அறிவித்தார். அப்போது விக்னேஷ் புத்தூர் அங்கில்லை. அதன்பின் தேடிய போது, அனைவருக்கும் பின்னிருந்து முன் வந்தார். அவரின் ஜெர்சியில் நீட்டா அம்பானி பேட்ஜ் அணிந்து வாழ்த்து கூறினார். அப்போது ஒரு நொடி கூட யோசிக்காத விக்னேஷ், உடனடியாக அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதனை மும்பை வீரர்கள் ஜாலியாக பார்த்தனர். பின் விக்னேஷ் புத்தூர் பேசுகையில், இந்த போட்டியில் விளையாட வாய்ப்பளித்த மும்பை இந்தியன்ஸ் அனிக்குதான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவ்வளவு பெரிய ஜாம்பவான் வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவேன் என்று வாழ்க்கையில் கற்பனை கூட செய்ததில்லை.
மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் வென்றிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். அதேபோல் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்கு ஆதரவளித்தார். அவரின் ஆதரவால்தான் அழுத்தமின்றி பவுலிங் செய்ய முடிந்தது. அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார். சூர்யகுமார் யாதவ் பற்றி பேசுகையில், சூர்யகுமார் யாதவ் தம்பி போதும்பா என்று கைகளில் அசைத்து கொடுத்த ரியாக்சன் மும்பை ரசிகர்களிடையே சிரிப்பை வரவழைத்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications