Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விக்னேஷ் புத்தூருக்கு அம்பானி குடும்பம் செய்த உதவி.. மும்பை அணி செலவில் வெளிநாடு பயணம்.. காரணமே வேற

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அறிமுகமான விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதற்கு முன்பாக மும்பை அணியால் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அவர், எஸ்ஏ20 லீக் தொடரின் போது ரஷீத் கானுடன் பயிற்சி மேற்கொள்ள வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக கிரிக்கெட் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் பேசுகையில், சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் ஏன் ஸ்பெஷல் என்றால், அவர்கள் ஒருநாளும் பணத்திற்கு முக்கியத்துவம் அளித்ததே இல்லை. சிஎஸ்கே அணி நிர்வாகமும், கேப்டன் தோனியும் வெற்றி, தோல்வியை சாதாரணமாக எடுத்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள்.

CSK vs MI Vignesh Puthur sent to South Africa to practice with Rashid Khan and Expenses taken care of Mumbai Indians

சிஎஸ்கே, மும்பை ஸ்பெஷல்

மற்ற அணி நிர்வாகங்கள் வீரர்கள் குடும்பத்தினருக்கு செய்யப்படும் செலவுகளை, அந்த வீரரின் ஊதியத்தில் கழித்து கொள்வார்கள். ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் குடும்பத்தினருடன் வருவதற்கு ஒருநாளும் தடைவிதித்தது கிடையாது. அதனால்தான் சிஎஸ்கே அணியின் அத்தனை வீரர்களின் குடும்பத்தினரும் எப்போதும் மைதானத்தில் இருக்க காரணம்.

பயிற்சிக்கு ரூ.1 லட்சம்

அதேபோல் மும்பை அணி ஒரு வீரர் மீது நம்பிக்கை வைத்தால், அந்த வீரருக்காக எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுப்பார்கள். ஒரு கூக்குபுரா பந்தின் விலை ரூ.15 ஆயிரம். ஒரு வீரரின் பயிற்சிக்காக ஒருநாளுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்ய கூட மும்பை அணி தயாராக இருக்கும். எந்த நேரத்திலும் மும்பை அகாடமியில் பயிற்சி மேற்கொள்ளலாம் என்று கூறி இருப்பார்.

மும்பை அணியின் சிறப்பு

அப்படிதான் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக கிளப் கிரிக்கெட் ஆடிய ஒரு சிறிய இளைஞரை அழைத்து வந்து உலகையே வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது விக்னேஷ் புத்தூர். நிரூபிக்கப்பட்ட திறமையாளர்களை விடவும், இளம் வீரர்கள் மீது முதலீடு செய்து அவர்களை முதல் போட்டியிலேயே விளையாடுவதற்கு ஒரு தைரியம் தேவை. அந்த தில் மும்பை அணிக்கு அதிகமாக உள்ளது.

அடையாளம் கண்ட பல்தான்ஸ்

ஏனென்றால் கேரளா ரஞ்சி அணியில் கூட ஆடாத விக்னேஷ் புத்தூரை ரூ.30 லட்சத்திற்கு வாங்கி, அவரை பரம எதிரியான சிஎஸ்கே அணிக்கு எதிராக களமிறக்கி ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. விக்னேஷ் புத்தூரின் அடிப்படைகள் சரியாக இருப்பதை கண்டறிந்த மும்பை அணி, அவரை உடனடியாக ட்ரையல்-க்கு வரவழைத்து இருக்கிறது.

விக்னேஷ் புத்தூர் கொடுத்த சர்ப்ரைஸ்

அங்கு பராஸ் ஆம்ரே, ஜெயவர்தனே உள்ளிட்டோருக்கு முன் சில சீனியர் வீரர்களுக்கு பவுலிங் செய்ய பணிக்கப்பட்டுள்ளார். சில மணி நேரம் அவர் பவுலிங் செய்வதை, நேரில் பார்த்த பின், மீண்டும் அனலிஸ்ட்-களுடன் அமர்ந்து விவாதித்துள்ளனர். இதன்பின் மெகா ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட விக்னேஷ் புத்தூர்-ன் திறமையை மேம்படுத்த மும்பை அணி சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ரஷீத் கானுடன் பயிற்சி

அதாவது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ20 லீக் தொடரில் MI கேப்டவுன் அணிக்காக ரஷீத் கான் ஆடினார். அப்போது ரஷீத் கானுடன் பயிற்சி மேற்கொள்ளவும், அவருடன் கிரிக்கெட் சார்ந்த உரையாடல்களை நடத்தவும் சொந்த செலவில் விக்னேஷ் புத்தூரை மும்பை அணி அனுப்பி இருக்கிறது. இதனால் எஸ்ஏ20 லீக் தொடரின் பயிற்சி வீடியோக்களில் விக்னேஷ் புத்தூர் அதிகமாகவே இடம்பெற்றுள்ளார்.

சீனியர்களை சிரமப்படுத்திய விக்னேஷ்

அங்கிருந்து நேராக மும்பை அணியின் பயிற்சி முகாமில் விக்னேஷ் புத்தூர் இணைந்துள்ளார். அப்போது சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு பவுலிங் செய்த போது, விக்னேஷ் புத்தூரின் பந்துகளை எதிர்கொள்ள அவர்களும் சிரமங்களை சந்தித்துள்ளனர். பின்னர் ஹர்திக் பாண்டியாவுக்கு பவுலிங் செய்த போது, மீண்டும் அதே கதை தொடர்ந்துள்ளது.

மும்பை எடுத்த ரிஸ்க்

இதனால் உற்சாகமடைந்த மும்பை அணியின் பராஸ் ஆம்ரே, விக்னேஷ் புத்தூரை ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். அதற்கு மற்ற பயிற்சியாளர்களும் உடன்பட, சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறக்கப்பட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது மும்பை அணி. வேறு எந்த அணி நிர்வாகமும் இப்படியான ஒரு ரிஸ்கை எடுத்ததே கிடையாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+