சிஎஸ்கே ப்ளூபிரிண்ட்.. வெட்ட வெளிச்சமாக்கிய ஆர்சிபி அணி.. சேப்பாக்கம் கோட்டை தகர்ந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அடைந்துள்ள தோல்வி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை எப்படி வீழ்த்த வேண்டும் என்ற ப்ளூபிரிண்ட்-ஐயும் ஆர்சிபி அணி மற்ற அணிகளுக்கு கொடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்திலேயே ஆர்சிபி அணியிடம் தோல்வியை சந்தித்திருப்பது சிஎஸ்கே அணி மீதான ரசிகர்களின் நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று 3 துறைகளிலும் சிஎஸ்கே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

CSK vs RCB RCB released a blueprint to defeat CSK at the Chepauk Stadium which is shocking for the fans

வழக்கமாக சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் முதல் 6 ஓவர்களுக்கு பின் முழுமையாக ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரும். ஜடேஜா உள்ளிட்ட 3 ஸ்பின்னர்களை வைத்து சிஎஸ்கே அணி இத்தனை ஆண்டுகளாக எதிரணிகளை சோக் செய்து வந்தது. ஒரு விக்கெட் வீழ்ந்தாலே, அடுத்தடுத்து ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செய்ய தொடங்கிவிடுவார்கள்.

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பில் சால்ட் விக்கெட் வீழ்த்தப்பட்ட பின், படிக்கல் கொடுத்த ஷாக் மொத்த ஆட்டத்தையும் மாற்றியது. அதாவது ஜடேஜா வீசிய 7வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசிய படிக்கல், 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். பில் சால்ட் விக்கெட் வீழ்த்திய பின் படிக்கலின் ஆட்டத்தை கட்டுப்படுத்தி இருந்தாலே, சிஎஸ்கே அணியால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி இருக்க முடியும்.

ஆனால் ஆர்சிபி அணியின் வீரர்கள் அட்டாக்கில் இருந்து கொஞ்சம் கூட பின் வாங்கவில்லை. ஏனென்றால் 10 ஓவர்களிலேயே 100 ரன்களுக்கு நெருக்கமாக ஆர்சிபி அணி ரன்களை குவித்தது. இதன் மூலமாக சிஎஸ்கே அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்துவதற்கான ப்ளூபிரிண்டை ஆர்சிபி அணி அனைத்து அணிகளுக்கும் போட்டு கொடுத்துள்ளது.

Take a Poll

இதனால் ஸ்பின்னர்கள் இல்லாமலேயே தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் மூலமாகவே சிஎஸ்கே அணியை சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்று ஆர்சிபி அணி நிரூபித்துள்ளது. அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலர்களை சரியாக பயன்படுத்தி, ஆர்சிபி அணி மீது அழுத்தத்தை கொடுக்கவில்லை என்றும் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+