பேய்க்கும் பேய்க்கும் சண்டை.. சூர்யவன்ஷி vs ஆயுஷ் மாத்ரே? கடைசி இடத்தில் நிறைவு செய்யும் சிஎஸ்கே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்ப் படம் - 2ல் யார் கேவலமாக டான்ஸ் ஆடுகிறார்கள் என்று சிவா மற்றும் சதீஷ் இடையே போட்டி நடக்கும். அப்படிதான் யாருக்கு இந்த ஐபிஎல் சீசன் மிகவும் கொடூரமானது என்பதை முடிவு செய்யும் போட்டியாக சிஎஸ்கே - ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணி இதுவரை 9 போட்டிகளில் சேஸிங் செய்து, 8ல் தோல்வியை சந்தித்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே இப்படியொரு சாதனையை எந்த அணியும் செய்ததில்லை. இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி ஜடேஜாவை நம்பர் 4ல் களமிறக்கி வருவதோடு, மினி ஏலத்திற்கு செல்லாமலேயே மொத்த அணியையும் மாற்றி இருக்கிறது. அதேபோல் 2020ஆம் ஆண்டில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே ஆடிய 9 போட்டிகளில் 7ல் தோல்வியை சந்தித்துள்ளது.

CSK vs RR Which team is going to finish in last place of the point table between CSK and RR in ipl 2025

இந்த நிலையில் பேட்டிங்கிற்கு சாதகமான டெல்லி மைதானத்தில் இந்த போட்டி நடக்கவுள்ளது. எந்த அணியிடம் பேட்டிங் பலமாக உள்ளதோ, அந்த அணியே வெல்லும் என்று பார்க்கப்படுகிறது. இந்த போட்டியை பொறுத்தவரை புள்ளிப் பட்டியலில் எந்த அணிக்கு கடைசி இடம் என்பதை முடிவு செய்யும் போட்டியாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்த போட்டியில் வென்றால் சிஎஸ்கே அணி 8 புள்ளிகளுடன் 9வது இடத்திற்கு முன்னேறும்.

அதேபோல் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தால், 6 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்படும். தோனியின் கடைசி சீசனாக பார்க்கப்படும் நிலையில், சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் முடித்தால், ரசிகர்கள் கூடுதல் சோகம் அடைவார்கள். சிஎஸ்கே அணியின் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் நிறைவு செய்ததில்லை.

இதனால் சிஎஸ்கே அணி எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் வென்று 8 அல்லது 9வது இடத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியில் சாம் கரண் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் மீண்டும் இந்திய வரவில்லை. இதில் சாம் கரண் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் ஆடி வந்தவர். இதனால் இன்றைய ஆட்டத்தில் சாம் கரண் இடத்தில் ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் யு19 இந்திய அணியில் விளையாடும் சூர்யவன்ஷி மற்றும் மாத்ரே இருவரும் நேருக்கு நேர் மோதவுள்ளனர். இதில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால், இந்த சீசனை கடைசி இடத்தில் நிறைவு செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் கூடுதல் மன தைரியத்துடன் இந்தப் போட்டியை பார்க்க தயாராக வேண்டும் என்று ஆர்சிபி மற்றும் மும்பை அணி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+