கண்ணீருடன் தனியாக.. கடைசி 2 பந்தில் தவறு செய்துவிட்டேன்.. ஓய்வறையில் கதறி அழுத டேவிட் மில்லர்!
டெல்லி: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கடைசி பந்தில் தோல்வி அடைந்தது. 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது டேவிட் மில்லர் எடுத்த தவறான முடிவு, அந்த அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது. இதனால் டெல்லி அணியின் ஓய்வறையில் டேவிட் மில்லர் தனியாக அமர்ந்து அழுதிருக்கிறார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 45 பந்துகளில் 70 ரன்களை சேர்த்தார். தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

இதனால் கடைசி 6 பந்தில் டெல்லி அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 4 பந்துகளில் 11 ரன்களை டெல்லி அணி சேர்த்திருந்தது. இதனால் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அப்போது டேவிட் மில்லர் களத்தில் இருந்ததால், நிச்சயம் டெல்லி அணியின் வெற்றி உறுதி என்று பார்க்கப்பட்டது. ஆனால் 5வது பந்தில் டேவிட் மில்லர் சிங்கிள் ஓட மறுத்துவிட்டார்.
அந்த ஒரு ரன்னை எடுத்திருந்தால், ஆட்டம் சமனில் முடிந்திருக்கும். இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. அந்த பந்தை பிரசித் கிருஷ்ணா கொஞ்சம் பவுன்ஸ் உடன் வீச, அது விக்கெட் கீப்பர் பட்லர் கைக்கு சென்றது. இதனால் கடைசி பந்தில் குல்தீப் யாதவ் ரன் அவுட்டாக, குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணி தங்களின் கைகளில் இருந்த வெற்றியை, குஜராத் அணியிடம் தாரைவார்த்தது. டெல்லி அணியின் இந்த தோல்விக்கு டேவிட் மில்லரின் ஓவர் கான்ஃபிடன்ஸ் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. 5வது பந்தில் ஒரு ரன்னை எடுத்திருந்தால் கூட, குறைந்தபட்சம் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கும். அதேபோல் குல்தீப் யாதவும் 1 ரன்னை எளிதாக எடுக்க கூடிய வீரர் தான்.
இதனால் டேவிட் மில்லரின் தவறான முடிவு டெல்லி தோல்விக்கு காரணமாகியது. இந்த நிலையில் போட்டிக்கு பின் டெல்லி அணியின் ஓய்வறையில் இருந்து டேவிட் மில்லர் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார். இதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டேவிட் மில்லருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications