டெல்லி அணி வெற்றியால் சிஎஸ்கே-க்கு அடித்த ஜாக்பாட்! சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி இருக்கு?
சென்னை: எம். எஸ் தோனி இல்லாமலேயே இந்த முறை பிளே ஆஃப்க்கு சென்னை அணி சென்றுவிடும் என ரசிகர்கள் நம்பி வருகிறார்கள். நேற்று நடந்த போட்டியிலும் மாஸ் வெற்றி பெற்ற சென்னை அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 5 வது இடத்திற்கு முன்னேறியது. இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் இடையேயான போட்டியில், டெல்லி அணி வெற்றி பெற்றதன் மூலமாக சென்னை அணிக்கு கூடுதல் பூஸ்ட் கிடைத்துள்ளது. அதாவது பஞ்சாப் அணி தோற்று இருப்பது சென்னை அணிக்கு பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிஎஸ்கே அணி சிறப்பாகவே ஆடி வருகிறது என்று சொன்னாலும் சில சமயங்களில் அப்படியே தலைகீழாக மாறி விடுகின்றது என ரசிகர்கள் ஆரம்பத்தில் புலம்ப ஆரம்பித்தனர். எனினும் கடைசி இரண்டு போட்டிகளில் சென்னை அணி சிறப்பாக ஆடியது.

5 வது இடத்தில் சென்னை அணி
மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரே சீசனில் இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் நேற்று நடந்த லக்னோ அணியுடனான போட்டியிலும் சென்னை அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. அதாவது சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது. உர்வில் படேல் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் அபார ஆட்டமே இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. மோசமான தொடக்கத்திற்குப் பிறகு, சென்னை அணியின் இந்த வெற்றிகரமான பயணம் பிளேஆஃப் வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் தற்போது சென்னை அணி 11 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பொதுவாக, பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற ஒரு அணிக்கு 16 புள்ளிகள் தேவைப்படும். எனவே எஞ்சிய மூன்று ஆட்டங்களில் சென்னை அணி நான்கு புள்ளிகள் பெற்றால், அதாவது 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப்க்கு தகுதி பெறும். எனவே அடுத்த 3 போட்டிகளில் கண்டிப்பாக இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பிளே ஆஃப் வாய்ப்பு
அதே சமயம் சென்னை அணிக்கு முந்தைய இடமான, 4 ஆம் இடத்தில் பஞ்சாப் அணி இருந்து வருகிறது. இன்று நடந்த போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிக்கான போட்டியில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்து இருப்பது சென்னை அணிக்கு ஒரு பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அடுத்த போட்டிகளில் 2-லும் பஞ்சாப் அணி தோற்றுவிட்டால் சென்னை அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் உறுதியாக சென்னை பிளே ஆஃப்க்கு சென்று விட முடியும்.
அதே நேரம் 6வது இடத்தில் 12 பாயிண்டுகளுடன் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சென்னை அணி பிளே ஆஃப் செல்வதை தடுக்க வாய்ப்பு உள்ளது. இரு அணிகளும் தலா இரண்டில் வெற்றி பெற்றால், ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணிக்கே பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றே சொல்லலாம். ஆனால் சென்னையை விட அதிக போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் சென்னை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு குறைந்துவிடும்.
டெல்லி அணி வெற்றியால்..
தற்போதைக்கு பெங்களூர் அணி முதல் இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூற பிளே ஆஃப்க்கு செல்ல முடியும். இரண்டாம் இடத்தில் உள்ள ஐதராபாத் அணி மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப்க்கு செல்ல முடியும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது பெங்களூர், குஜராத், ஐதராபாத் ஆகிய 3 அணிகளும் ஒரே பாயிடுண்டுகளுடனும் ரன் ரேட் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இதற்கு அடுத்தப்படியாக பஞ்சாப் அணி 4 ஆம் இடத்திலும், சென்னை அணி 5 ஆம் இடத்திலும் உள்ளன. பஞ்சாப் அணி ஒரு மேட்ச் டிரா ஆனதால் 13 பாயிண்டுகளுடன் உள்ளது. டெல்லி அணி இன்றைய போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி இருப்பதால் அடுத்த 3 போட்டிகளை வைத்து சென்னை அணியின் பிளே ஆஃப் கனவு இருக்கிறது.
அடுத்தடுத்த போட்டிகளிலும் பஞ்சாப் அணி தோற்று சென்னை அணி பிளே ஆஃப் செல்ல உதவுமா இல்லை சென்னைக்கு வேட்டு வைக்கிறதா என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம். எனினும் தற்போதைக்கு பஞ்சாப் அணி தோற்று இருப்பது சென்னை அணிக்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications