வேலைக்கு ஆகாத தோனி மேஜிக்.. மும்பைக்கு எதிராக வாய்ப்பை மிஸ் செய்த சிஎஸ்கே.. மேஜர் தவறுகள் இதுதான்
மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை மும்பை இந்தியன்ஸ் அணி பந்தாடியது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணி வெல்வதற்கு நல்ல வாய்ப்பு இருந்தும் கோட்டை விட்டது. சென்னை அணி செய்த மேஜர் தவறுகளை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வந்த இரு அணிகளுக்கும் இந்த ஐபிஎல்லில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தன.

176 ரன்கள் எடுத்த சென்னை
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சென்னை அணியும் தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் வென்று வெற்றிப்பாதைக்கு திரும்பியது. இதனால் இன்றைய பொட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவகளில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ஜடேஜா, ஷிவம் துபே அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த முறையும் ரச்சின் ரவீந்திரா ஏமாற்றினார். வழக்கம் போல் சிஎஸ்கே அணி பவர் பிளேவில் 50 ரன்களை கூட தாண்டவில்லை. 48 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது.
ரோகித் - சூர்யகுமார் அசத்தல்
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்கத்திலேயே 10 என்ற ரன் ரேட்டை தக்க வைத்து வந்தது. இதனால் அந்த அணி எளிதில் வெற்றி பெற்றது. 15.4 ஓவர்களில் வெற்றி இலக்கை மும்பை அணி எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 45 பந்துகளில் 76 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இதேபோல் சூர்யகுமார் யாதவும் 30 பந்துகளுக்கு 68 ரன்கள் விளாசி மும்பை அணியை எளிதில் வெற்றி பெற செய்தனர். ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே சென்னை சூப்பர் கிங்க்ஸ் பவுலர்களால் கைப்பற்ற முடிந்தது. இதன் மூலம் சென்னை அணியை மும்பை இந்தியன்ஸ் அணி ஊதித்ததள்ளியது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது 6 வது தோல்வியாகும்.
பிளே ஆப் செல்லும் வாய்ப்பு?
இனி மீதமுள்ள 6 போட்டிகளில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணியால் செல்ல முடியும். ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட சென்னை அணியின் பிளே ஆஃப் கனவு மங்கி விடும். சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றாலும் கூட சென்னை அணியால் மீண்டும் வர முடியவில்லை. சென்னை அணியின் இன்றைய தோல்விக்கான மேஜர் காரணங்களை இங்கே பார்க்கலாம்.
மீண்டும் மீண்டும் அதே தவறினை செய்யும் சிஎஸ்கே
சென்னை அணி இன்றும் துவக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பேட்டிங் பிட்சான மும்பை வான்கடே மைதானத்தில் பவர் பிளேவிலேயே 80 ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் சென்னை அணி வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதிலும் புதிதாக களம் இறங்கிய 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரா 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். 2 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளை அடித்து இருந்தார்.
ஷிவம் துபே, ஜடேஜா அதிரடியாக ஆடினாலும் மிடில் ஓவர்களில் கிட்டத்தட்ட 29 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி கூட இந்த ஜோடி அடிக்கவில்லை. அதிக பந்துகளை வீணாக கரைத்தனர். கடைசி ஒவர்களில் ரன் ரேட்டை தக்க வைக்கவும் சென்னை அணி தடுமாறியது.
ஒரு கடத்தில் 200 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்கோர் வேகம் சட்டென குறைந்தது. துபேவிற்கு பிறகு வந்த தோனி வந்ததும் அவசரம் காட்டாமல் 10 வது ஓவரில் இறங்கியது போல சிங்கிள் வைக்கவே செய்தார். பவுண்டரிக்கு ஆரம்பித்தில் முயற்சிக்கவில்லை. ஜடேஜா முடிந்த அளவு அதிரடி காட்டினாலும் இது சவாலான ஸ்கொரை எட்ட உதவ வில்லை.
ஹர்திக் பாண்ட்யா செய்த செயல்
கடைசி கட்டத்தில் அடித்து ஆடுவார் என்று எதிர்பார்த்த தோனி, புல்டாஸ் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியும் கடைசி கட்டத்தில் மிகவும் துல்லியமாக பந்து வீசியது. ஷிவம் துபே ஆட்டமிழந்ததும் சாண்டனருக்கு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஓவரை கொடுத்தார். தோனி ஸ்பின் பந்தில் அதிகம் அடித்து ஆட மாட்டர் என்பதை கணித்த ஹர்திக் பாண்ட்ய இதை செய்தார். இதனால் சென்னை அணியின் 180 ரன்களை எட்ட முடியாமல் சுருண்டது
பந்து வீச்சிலும் சென்னை அணி இன்று படுமோசமாக செயல்பட்டது. பார்ம் இன்றி தவித்து வந்த ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் வெளுத்து வாங்கினார். சென்னை அணி பந்து வீச்சாளர்கள் யாரையும் பாரபட்சம் காட்டாமல் அடித்து ஆடினார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications