கேப்டன்சியில் இருந்து விலகும் ஹர்திக்! மும்பையிடம் வாங்க முயற்சிக்கும் சிஎஸ்கே.. ஜாக்பாட் அடிக்குமா?
மும்பை: மும்பை அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகும் முடிவை ஹர்திக் பாண்டியா எடுத்துள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்யும் முடிவுக்கு மும்பை அணி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் வாங்க தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.
நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி பொறுப்பில் இருந்து முழுமையாக விலக முடிவெடுத்துள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு சீசன்களாக ரசிகர்கள் மத்தியில் எழுந்த கடுமையான எதிர்ப்புகள், மன அழுத்தம் மற்றும் அணியின் தொடர் தோல்விகள் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அவரை 'டிரேடிங் விண்டோ' முறையில் பிற அணிகளுக்கு மாற்றத் தயாராகி வருகிறது.
இந்த செய்தி வெளியான உடனே, ஹர்திக் பாண்டியாவைத் தங்களது அணியில் இழுக்க சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய முன்னணி ஐபிஎல் அணிகள் இப்போதே ரகசியமாக காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன.ஹர்திக் பாண்டியாவை வாங்குவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ஆர்வம் காட்டி வருவதாக முன்னாள் வீரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு கேப்டனானதால் மும்பை ரசிகர்களிடம் ஹர்திக் இழந்த நற்பெயரை, சிஎஸ்கே மீட்டுக்கொடுக்கும் என நம்பப்படுகிறது. தோனியுடன் ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் மிக நெருக்கமான நட்பு, அவர் சென்னை அணிக்கு மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது.
சிஎஸ்கேவில் இருந்து சிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோரை மும்பைக்கு கொடுத்துவிட்டு, ஹர்திக்கை டிரேடு செய்ய ஆலோசனைகள் நடந்து வருகின்றன. நடப்பு சீசனில் மும்பை அணி 9வது இடத்தைப் பிடித்ததும் அவரை முற்றிலும் சோர்வடைய செய்துள்ளது. எனவே, அவர் மிட்-சீசனிலேயே மும்பை அணியில் இருந்து வெளியேறும் எண்ணத்தை நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.
மறுபக்கம் கேகேஆர் அணி தனது மிடில் ஆர்டரை மேலும் வலுப்படுத்த ஒரு தரமான இந்திய ஆல்-ரவுண்டரைத் தேடி வருகிறது. ஹர்திக்கைப் பெற்றுக் கொள்ள கேமரூன் கிரீன் அல்லது ரிங்கு சிங் போன்ற வீரர்களை மும்பைக்கு மாற்ற கேகேஆர் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனால் அந்த அணிக்கு இப்போது ஒரு வலுவான இந்திய கேப்டன் தேவைப்படுகிறார். குஜராத் அணியை சாம்பியனாக்கிய அனுபவம் கொண்ட ஹர்திக்கை வாங்கி, அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்க லக்னோ நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதனால் எந்த அணிக்கு ஜாக்பாட் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications