8வது பேட்ஸ்மேனாக வந்த துருவ் ஜுரெல்.. கம்பீரின் ஈகோவால் தோல்வியடைந்த இந்திய அணி.. என்ன நடந்தது?
ராஜ்கோட்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களைல் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே எடுத்து, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஓவர்டன் 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் கார்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இந்திய அணியின் இந்த தோல்விக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் மோசமான திட்டமே காரணமாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற நாள் முதலே இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் இடதுகை - வலதுகை வரிசையில் மாற்றியமைத்து வருகிறார். ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இப்படிதான் மாற்றங்களை செய்திருந்தார். அதேபோல் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் அதே பாணியை பின்பற்றினார்.
இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை திறமைக்கு ஏற்ப பயன்படுத்தாமல், இடதுகை - வலதுகை பேட்ஸ்மேன்கள் சரியாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். அதாவது தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பின் உடனடியாக வலதுகை பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். அதேபோல் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பின் திலக் வர்மா களமிறக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் ஆட்டமிழந்த பின், அனைவரும் துருவ் ஜுரெல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியா கொண்டு வரப்பட்டார். இதன்பின் திலக் வர்மா 14 ரன்களில் ஆட்டமிழகக், கடைசி பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல் வருவார் என்று எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வாஷிங்டன் சுந்தர் களம் புகுந்தார். அழுத்தம் அதிகமிருந்த சூழலில் வாஷிங்டன் சுந்தர் ரன்கள் சேர்க்க முடியாமல் திணற, ஹர்திக் பாண்டியா மீதும் அழுத்தம் ஏறியது. இதனால் 15 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து சுந்தர் வெளியேறினார். இதன்பின்னாவது துருவ் ஜுரெல் வருவார் என்று பார்த்தால் அக்சர் படேல் வந்தார்.
ஆல்ரவுண்டர்களை விடவும் சிறந்த பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல் களமிறக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியாவுடன் களமிறங்கி துருவ் ஜுரெல் பேட்டிங் செய்திருந்தால், நிச்சயம் டாட் பால்களை விளையாடி இருக்க மாட்டார். இதனால் பேட்ஸ்மேன்களின் திறமையை விடவும், இடதுகை - வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக மாறியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications