இங்கிலாந்தை அலற வைத்த 7.2 டிகிரியும்.. 11ம் நம்பரும்.. லோ ஸ்கோர் ஆட்டத்தில் இந்தியா வென்றது எப்படி?
சென்னை; இங்கிலாந்துக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் 2023 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து நாக் அவுட் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா ஆடியது. இந்திய அணியில் இந்த போட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை. ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்தனர்.
இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி தற்போது 99-3 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. தொடக்கத்தில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த இந்தியா தற்போது ரோஹித் சர்மாவின் அரைசதம் காரணமாக சரிவில் இருந்து மீண்டு உள்ளது.

மோசமான பேட்டிங், மீட்ட ரோஹித்; இந்த போட்டியில் தொடக்கத்திலேயே இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கில் 13 பந்துகள் பிடித்து வெறும் 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கோலி இன்னொரு பக்கம் டக் அவுட் ஆனார். பிட்ச் அந்த அளவிற்கு பேட்டிங் செய்ய கஷ்டமாக இருந்தது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகள் பிடித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். எதிர்பார்த்தபடியே ஷார்ட் பந்தில் அவர் அவுட் ஆனார். இதன் பின் அணியை சரிவில் இருந்து மீட்டு ரோஹித் சர்மா சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தார். 101 பந்துகள் பிடித்த 87 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ராகுல் 39 ரன்கள் எடுத்தார் .
கடைசி கட்டத்தில் விளாசிய சூரியகுமார் யாதவ் 47 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். இதனால் 180ல் சுருண்டிருக்க வேண்டிய இந்திய அணி 229-9 ரன்கள் எடுத்தது.
( இவரை எல்லாம் டீம்லயே எடுக்க மாட்டேன்.. கமெண்டரியில் விளாசிய கிரிஸ் ஸ்ரீகாந்த்.. டென்ஷனாக்கிய வீரர்)
பவுலிங்: இதையடுத்து பவுலிங் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வீரர்கள் மீது பிரஷர் போட்டது. டேவிட் மாலன் விக்கெட்டை 16 ரன்களுக்கு பும்ரா எடுத்தார். அடுத்த பந்தே ஜோ ரூட் விக்கெட்டை பும்ரா எடுத்தார். பின்னர் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை ஷமி டக் அவுட்டில் எடுக்க இங்கிலாந்து அணி திணறியது., அடுத்து பிரைஸ்டா விக்கெட்டை 14 ரன்களுக்கு சமி எடுத்தார்., அடுத்த 25 ரன்களுக்கு குட்டி பார்ட்னர் ஷிப் அமைத்த பட்லர் மெயின் அலி.. குல்தீப், சமி பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்படி குல்தீப், ஜடேஜா மீண்டும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை 98-8 ரன்களுக்கே இழந்து தள்ளாடியது. அதன்பின் தொடர்ந்து பிரஷர் போட்ட இந்திய பவுலர்கள், சமி, பும்ரா விக்கெட் எடுக்க 129 ரன்களுக்கு இங்கிலாந்து அணியை சுருட்டி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர்.
இதில் குல்தீப் பட்லர் விக்கெட்டை எடுக்க 7.2° கோணத்தில் ஸ்பின் செய்தது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதேபோல் 11ம் நம்பர் ஜெர்சி ஷமி பவுலிங் செய்த விதம் வெறும் 2 எக்கனாமியில் 4 விக்கெட்டுகளை எடுத்தது பெரிய ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

இந்தியா அடுத்தடுத்து வெற்றி; 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில போட்டிகளாக ஆட்டம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.
அதன்பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராகவும் இன்று லோ ஸ்கோர் ஆட்டத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் 6 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications