"டாட்".. இந்திய அணியின் வெற்றிக்கு பின் உள்ள ரகசியம் இதுவா? அப்போ நியூசி? ஆ எதிர்பார்க்கவே இல்லையே!
சென்னை: 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர் வெற்றிகளை குவிக்க மிக முக்கிய காரணமாக ஒரு மூத்த வீரர் இருந்துள்ளார்.
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை செமி பைனலில் எதிர்கொள்ள உள்ளது. கிட்டத்தட்ட இந்த உலகக் கோப்பை 2019 உலகக் கோப்பை போல இந்த செமி பைனல் மாறிவிடும். செமி பைனலில் நாம் நியூஸிலாந்திடம் ஏற்கனவே தோல்வி அடைந்துவிட்டோம்.

செமி பைனல்: இந்த முறை செமி பைனலுக்கு 9 முறை தொடர் வெற்றிகளோடு இந்தியா சென்றுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்தை ஒருமுறை இந்தியா இந்த தொடரில் வீழ்த்தியும் விட்டது. இந்திய அணி எப்போதுமே லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடி உள்ளது. ஆனால் செமி, பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் தோனிக்கு பின்பாக எந்த கேப்டனும் சரியாக ஆடவில்லை. அந்த அழுத்தம் இப்போதும் இந்திய அணிக்கு இருக்கும். அதை சரி செய்ய இந்திய அணி கஷ்டப்பட வேண்டும். இதுவே பெரிய அழுத்தத்தை இந்திய வீரர்களுக்கு கொடுக்கும்.
அதேபோல் இந்தியா வெற்றி மிதப்பில் இருக்க கூடாது. வரிசையாக இந்தியா வென்றுவிட்டது. 9க்கு 9 போட்டிகளில் வென்றுவிட்டது. இந்திய அணியின் தொடர் வெற்றிகள் முக்கியமான ஆபத்து ஆகும். இதே மனநிலையோடு போனால் திடீர் தோல்விக்கு அது காரணம் ஆகும்.
இந்திய அணி எப்படி?: ஏனென்றால் இந்திய வீரர்கள் என்று இல்லை தொடர் வெற்றிகள் யாருக்குமே மிதப்பை கொடுக்கும். அந்த மிதப்பு காரணமாக வீரர்கள் சொதப்ப வாய்ப்பு உள்ளது. இந்த மனநிலையை ரோஹித்தான் மாற்ற வேண்டும். ஒரு தோல்வியாவது இருந்திருந்தால் பயம் வந்திருக்கும். ஆனால் அந்த பயம் இப்போது அணியில் இல்லை. இதனால் இந்திய அணி கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
முக்கியம் என்ன?: 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர் வெற்றிகளை குவிக்க மிக முக்கிய காரணமாக ஒரு மூத்த வீரர் இருந்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு வேறு ஒரு வீரர் சைலன்ட் காரணமாக இருந்து வருகிறார். அவர் பும்ரா. எல்லா மேட்சிலும் அவர் 2 விக்கெட்டுகளை குறைந்தபட்சம் எடுக்கிறார் .
முதல் 10 ஓவர்களில் மிக குறைந்த எக்கனாமி 3 வரை வைத்து இருக்கும் ஒரே பாஸ்ட் பவுலர் இந்த சீசனில் பும்ராதான். அதோடு இல்லாமல் இந்த சீசனில் ஜாஸ்பிரிட் பும்ரா 2023 உலகக் கோப்பையில் வீசிய 415 பந்துகளில் 300 டாட் பால்களை வீசியுள்ளார்.
கிட்டத்தட்ட 70 சதவிகிதத்திற்கும் மேல் அவர் டாட் பந்துகளை வீசி உள்ளார். இதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னொரு பெரிய காரணம் ஆகும். இக்கட்டான நேரத்தில் இவர் எதிரணிக்கு போடும் பிரஷர் அணியையே மாற்றி உள்ளது. சில போட்டிகளில் நன்றாக ஆடியும் சிலர் கவனம் பெறாமல் போவார்கள்.
அப்படித்தான் பும்ராவும் இந்த சீசனில் தொடர்ந்து மேட்சுக்கு 2 விக்கெட் எடுக்கிறார். ஆனால் ஷமி 4, 5 விக்கெட்டுகளை எடுப்பதால் இவரின் ஆட்டம் கவனிக்கப்படாமல் போய் விடுகிறது. இவரின் டாட் பந்துகள் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக மாறி உள்ளன.












Click it and Unblock the Notifications