குறுக்கே புகுந்த பஞ்சாப்.. சாமர்த்தியமாக சிஎஸ்கே செய்த காரியம்.. முக்கிய வீரரை தூக்க உதவிய புது விதி
டெல்லி: ஐபிஎல் ஏலத்தில் ஆர்டிஎம் எனப்படும் ரைட்-டு மேட்ச் மீண்டும் வருகிறது. 2014இல் அறிமுகப்படுத்தப்பட்ட, ஆர்டிஎம் பல அணிகளுக்கு ஏலத்தில் உதவியிருக்கிறது.. ஒரு அணி தனது வீரர்களை ஏலத்தில் மீண்டும் வாங்க இந்த விதி நமக்கு உதவுகிறது. இடையில் இந்த விதி நீக்கப்பட்ட போதிலும், இப்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரம், இதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
ஐபிஎல் ஏலத்தில் எப்போதும் ஆர்டிஎம் விதி முக்கியமானதாக இருக்கும். கடந்த 2018 ஏலத்தில் இந்த விதி நீக்கப்பட்ட நிலையில், இப்போது அது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கிறது.

ஆர்டிஎம்: அது என்ன ட்விஸ்ட் என்று பார்க்கும் முன்பு.. இந்த ஆர்டிஎம் எப்படிச் செயல்படும்! இது ஏன் நீக்கப்பட்டது என்பது குறித்து நாம் பார்க்கலாம். பழைய விதியின்படி ஒரு வீரர் ஏலத்தில் விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். அப்போது கடைசியாக அவர் விளையாடிய அணி அவரை தக்கவைக்க விரும்பினால் ஆர்டிஎம் ஆப்ஷனை பயன்படுத்துவார்கள். இதன் மூலம் அந்த வீரர் கடைசியாக ஏலம் போன தொகையில் பழைய அணிக்கே போவார்.
உதாரணத்திற்கு முன்னாள் வீரரை தினேஷ் கார்த்திக்கை எடுத்துக் கொள்வோம். அவர் கடைசியாகப் பெங்களூர் அணிக்காக விளையாடி இருந்தார். இதனால் அவரை பெங்களூர் அணியால் மட்டுமே ஆர்டிஎம் செய்ய முடியும். ஹைதராபாத் அணி அவரை ரூ. 12 கோடிக்கு ஏலம் எடுக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது பெங்களூர் ஆர்டிஎம் விதியை பயன்படுத்தினால் அதே 12 கோடிக்கு தினேஷ் கார்த்திக்கு பெங்களூருக்கு விற்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்,
நீக்கம்: அதேநேரம் இந்த விதி குறித்து சில எதிர்ப்பு எழுந்தது. அதாவது ஆர்டிஎம் பயன்படுத்தப்பட்ட பிறகு கடைசியாக ஏலம் கோரிய அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்றும் அப்படித் தராமல் விடுவதால் அந்த வீரரின் உண்மையான சந்தை மதிப்பு தெரிவதில்லை எனச் சொன்னார்கள். அதாவது ஹைதராபாத் அணி கூடுதல் தொகையைக் கேட்டிருக்கலாம். ஆர்டிஎம் ஆப்ஷனால் அது நடக்காமல் போனதாகவும் இது வீரர்களைப் பாதிப்பதாகச் சொன்னார்கள். குறிப்பாக இந்திய வீரர் அஸ்வின் பல முறை இது தொடர்பாகத் தனது யூடியூப் பக்கத்தில் பேசியிருந்தார்.
"கடைசி ஆயுதம்!" ஒரே வீரருக்கு இரு அணிகள் விடாமல் முட்டி மோதினால் என்னவாகும்! பிசிசிஐ-இன் வினோத விதி
புதிய விதி: இந்த சர்ச்சை காரணமாகக் கடந்த மெகா ஏலத்தில் இந்த ஆர்டிஎம் விதி நீக்கப்பட்டது. இந்த முறை ஆர்டிஎம் கொண்டு வந்தாலும் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கடைசியாக எந்த அணி ஏலம் எடுத்ததோ அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரப்படும்.. எவ்வளவு தொகையை வேண்டும் என்றாலும் அவர்கள் உயர்த்திக் கொள்ளலாம்.
எளிதாகப் புரிந்து கொள்ள நாம் முந்தைய உதாரணத்தையே எடுப்போம். தினேஷ் கார்த்தி மீது 12 கோடிக்குப் பெங்களூர் ஆர்டிஎம் பயன்படுத்துகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது மீண்டும் ஹைதராபாத் அணிக்கு ஒரு வாய்ப்பு தரப்படும். அதில் அவர்கள் கூடுதல் தொகையைக் கூட கேட்கலாம்.
சிஎஸ்கே: அதாவது தினேஷ் கார்த்திக்கு ரூ. 15 கோடியைத் தருவதாக ஹைதராபாத் சொல்லலாம். அந்த ரூ. 15 கோடி ஓகே என்றால் மட்டுமே பெங்களூருக்கு அவர் விற்கப்படுவார். இல்லையென்றால் ஹைதராபாத் அணிக்கே விற்கப்படுவார். இதன் மூலம் அவரது உண்மையான சந்தை மதிப்பு தெரிகிறது. அப்படி தான் சிஎஸ்கே அணி ரச்சின் ரவீந்திராவை ஆர்டிஎம் செய்தார்கள்.
அவர் 3.2 கோடிக்கு பஞ்சாபிடம் ஏலம் போன நிலையில், அவரை சிஎஸ்கே ஆர்டிஎம் செய்தது. மீண்டும் பஞ்சாப் அணி ரூ.4 கோடிக்கு அவரது விலையை ஏற்றிய நிலையில், அதற்கும் ஓகே சொல்லி சிஎஸ்கே அவரை தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு ஆர்டிஎம்: ஒரு அணி எவ்வளவு வீரர்களைத் தக்கவைத்துள்ளனர் என்பதைப் பொறுத்து ஆர்டிஎம் மாறும். 6 வீரர்களைத் தக்கவைத்தால் ஒரு ஆர்டிஎம் கூட கிடைக்காது. 3 வீரரை மட்டும் தக்கவைத்து இருந்தால் 3 ஆர்டிஎம் கிடைக்கும். இந்த முறை அதிகபட்சமாகப் பஞ்சாப் அணியிடம் 4 ஆர்டிஎம் இருக்கிறது. கேகேஆர், ராஜஸ்தான் அணிகளிடம் ஒரு ஆர்டிஎம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications