"கடைசி ஆயுதம்!" ஒரே வீரருக்கு இரு அணிகள் விடாமல் முட்டி மோதினால் என்னவாகும்! பிசிசிஐ-இன் வினோத விதி
சென்னை: இந்தாண்டு ஐபிஎல் மெகா ஏலம் இப்போது சவுதியில் நடந்து வருகிறது. ஸ்ரேயாஸ், பண்ட் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் புதிய சாதனை படைத்து வருகிறார்கள். ஏலத்தின் செயல்முறை ரொம்பவே எளிமையானது என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் அணியின் பர்ஸ் முடியும்போது ஒரே வீரரை இரு அணிகளும் ஏலம் கேட்டால் என்ன நடக்கும் என்று பலருக்கும் தெரியாது. அப்போது பிசிசிஐ வைத்திருக்கும் கடைசி ஆயுதமான சைலண்ட் டை பிரேக்கர் விதி பயன்படுத்தப்படும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஐபிஎல் மெகா ஏலம் இன்றும் நாளையும் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 577 வீரர்களின் ஏலம் விடப்பட உள்ளனர். குறிப்பாக 367 இந்திய வீரர்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

சைலண்ட் டை பிரேக்கர்: ஒவ்வொரு அணியும் சில வீரர்களை முன்கூட்டியே ஏலம் எடுத்துள்ள நிலையில், அதற்கான தொகை கழிக்கப்பட்டு மீத தொகையை மட்டுமே ஏலத்தில் பயன்படுத்தலாம். இந்த முறை ஸ்ரேயாஸ், பண்ட் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் புதிய சாதனை படைத்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க நாம் ஐபிஎல் ஏலத்தில் இருக்கும் சைலண்ட் டை பிரேக்கர் விதி குறித்துப் பார்க்கலாம்.
சரி இப்போது நமக்கு ஒரு கேள்வி வரும். ஒரு வேலை ஒரு வீரரை இரண்டு அணிகள் ஏலம் எடுக்க முயல்கிறார்கள். இருவரும் விலையை இஷ்டத்திற்கு ஏற்றிக் கொண்டே போகிறார்கள். அந்த வீரர் ரொம்பவே முக்கியமான வீரர் என்பதால் இரு அணிகளும் அவரை விடுவதாக இல்லை என வைத்துக் கொள்வோம்.
எப்போது: அதாவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் ஒரு வீரருக்காக ஒரே தொகையை ஏலம் கோரும் போது இது நடக்கும். இரு அணிகளும் ஒரு வீரருக்கு ஒரே தொகை சொல்கிறார்கள். அவர்களிடம் சம்பளத்தை அதிகரிக்கக் கூடுதல் நிதி இ்லலை என்ற போது தான் இந்த சைலண்ட் டை பிரேக்கர் விதி அமலுக்கு வரும். ஏலம் சமனில் முடியும் நிலையில், அந்த வீரர் விற்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.
அதேநேரம் அந்த வீரரை ஏலம் எடுக்க முயன்ற உரிமையாளர்களை பிசிசிஐ அழைக்கும். அந்த அணிகள் அந்த வீரருக்குக் கூடுதலாக எவ்வளவு தொகையைத் தர முன்வருகிறார்கள் என்பதை ஒரு பேப்பரில் எழுதி தருகிறார்கள். அந்த ஏல தொகையை பிசிசிஐ அதிகாரிகள் திறந்து யார் அதிக தொகைக்குக் கேட்டுள்ளாரோ அவருக்கு அந்த வீரரை விற்பதாக அறிவிப்பார். ஒரு வேலை அப்போது இரு அணிகளும் ஒரே தொகையைக் கேட்டிருந்தால் மீண்டும் அதே செயல்முறை நடக்கும். ஒரு அணி தொகையை அதிகமாகக் கேட்கும் வரை இந்த செயல்முறை தொடரும்.
இது முக்கியம்: இந்த டை பிரேக்கிங்கில் கோரப்படும் பணம் அணிகளின் டீம் பர்ஸ்ஸில் இருந்து கழிக்கப்படாது. மேலும் கூடுதலாகக் கோரப்பட்ட அந்த தொகையும் வீரருக்கு கிடைக்காது. மாறாக ஏலத்தில் கடைசியாக ஏலத்தில் தொகையிலேயே அந்த வீரர் ஒப்பந்தம் செய்யப்படுவார். அந்த கூடுதல் தொகை என்பது பிசிசிஐ அமைப்புக்குச் செலுத்தப்பட வேண்டும். ஏலம் முடிந்து 30 நாட்களுக்குள் அந்த தொகையை ஏலம் எடுத்த அணி பிசிசிஐ வசம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் இந்த விதி மினி ஏலத்தின் போது மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதியின் பெயர் தான் டை பிரேக்கர் விதி.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications