Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 வயதில் ஐசிசி உலகக்கோப்பை விளையாட திட்டமா? ரோஹித் சர்மா பதிலால் அதிர்ந்துபோன இந்திய ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு தொடர்பாக அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கால திட்டங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் தெரியும் என்று கூறிய ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணமே கிடையாது என்று அழுத்தி கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. அதேபோல் 2 ஆண்டுகளில் 2 ஐசிசி கோப்பைகளை வென்று கேப்டன் ரோஹித் சர்மா புதிய வரலாறு படைத்துள்ளார்.

ind vs nz champions trophy final Rohit Sharma

கடந்த 3 ஆண்டுகளில் 24 ஐசிசி போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி, ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் தோனிக்கு பின் மிகச்சிறந்த இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா உருவெடுத்துள்ளார். அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணமே கிடையாது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே கூறுகிறேன். எதிர்கால திட்டங்கள் குறித்து எதிர்காலத்தில் தெரிய வரும். தற்போதைய சூழல், அப்படியே தொடரும் என்று தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் பேச்சு அவரது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

38 வயதாகும் ரோஹித் சர்மா, இறுதிப் போட்டியில் 83 பந்துகளில் சிறப்பாக விளையாடி 76 ரன்களை விளாசி தள்ளினார். ஆனால் அதற்கு முன்பாக ரோஹித் சர்மாவின் ஆட்டம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா தொடரின் போது தனது இடத்தை பறிகொடுத்தார்.

கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட முடியாமல் ரோஹித் சர்மா திணறினார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று ரோஹித் சர்மா அறிவித்திருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வுபெறும் முடிவை ரோஹித் சர்மா எடுத்துவிட்டு, ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே தொடர விரும்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் அடுத்த சில மாதங்களுக்கு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட எந்த தொடரும் திட்டமிடப்படவில்லை. அடுத்த ஐசிசி தொடர் என்றால், அது 2027 உலகக்கோப்பை மட்டுமே இருக்கிறது. அப்போது ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகி இருக்கும் என்பதால், என்ன திட்டத்துடன் ரோஹித் சர்மா இருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+