இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்குமா? சிக்கலில் மாட்டிக் கொண்ட ஜெய் ஷா.. கதறும் ஒளிபரப்பாளர்கள்!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் வழியில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்பது சந்தேகம் என்று பேசி வரும் சூழலில், ஐசிசி தரப்பில் பல்வேறு எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை நம்பி ஒளிபரப்பாளர்கள் இருக்கும் சூழலில், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் ட்விட்ஸ் கொடுப்பது ஜெய் ஷாவுக்கு சிக்கலை உருவாக்கி இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதியுடன் நிறைவு அடைகிறது. இந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவுள்ளது. பாகிஸ்தான் அணி விளையாடும் அத்தனை போட்டிகளும் இலங்கை மைதானத்திலேயே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கதேச அணியும் இந்தியாவில் விளையாட மறுத்து வந்தது.

ஆனால் ஐசிசி பிடிவாதமாக வங்கதேசம் அணி விளையாடும் போட்டிகளில் இந்தியாவில் மட்டுமே நடக்க வேண்டும் என்று கூறி வந்தது. ஆனால் கடைசி வரை வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் இறங்கி வரவில்லை. ஐசிசி தரப்பில் 24 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை. இதனால் வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதா, வேண்டாமா என்ற முடிவை பாகிஸ்தான் பிரதமர் முடிவு செய்வார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது ஐசிசிக்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்துள்ளது. ஏனென்றால் வங்கதேசம் அணி பங்கேற்காததன் மூலமாகவே மிகப்பெரிய நிதி சிக்கலை ஐசிசி எதிர்கொள்ளும்.
தற்போது பாகிஸ்தான் அணியும் விலகினால், அது ஒளிபரப்பாளர்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தும். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி நேரடியாக எச்சரித்துள்ளது. அதாவது டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்கவில்லை என்றால், இனி பிஎஸ்எல் தொடருக்கு எந்த சர்வதேச வீரருக்கும் அனுமதி அளிக்கப்படாது.
சர்வதேச அணியுடன் எந்த ஒரு இருதரப்பு கிரிக்கெட் தொடரும் விளையாட முடியாது, ஆசியக் கோப்பை தொடரில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்று வார்னிங் கொடுத்துள்ளது. ஆனால் வங்கதேச அணியின் முடிவுக்கு பாகிஸ்தான் அணி ஆதரவாக இருப்பதால், பாகிஸ்தான் விளையாடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக ஜெய்ஷாவுக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications