பாபர் அசாமிடம் தப்பு கணக்கு போடாதீங்க.. அந்த பவுலர் இல்லனா ரொம்ப கஷ்டம்.. கம்பீர்தான் பிரச்சனையே!
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சர்வதேச அளவில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் மண்ணில் நடக்கவுள்ள ஆட்டத்தை பிசிசிஐ பிடிவாதமாக இருந்து துபாய் மைதானத்தில் நடத்துகிறது.
இதனால் இம்முறை இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்பதில் பாகிஸ்தான் அணியும், அந்த அணி ரசிகர்களும் தீவிரமாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் கட்டாய வெற்றியை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் அதிரடியாக விளையாட மறுப்பதும், டாப் ஆர்டர் சரிந்தால் மிடில் ஆர்டரில் அனுபவமில்லாத வீரர்கள் உள்ளதும் சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அணியின் ஒரேயொரு பேட்ஸ்மேனுக்கு பந்து பேட்டில் பட்டாலும் அந்த ஆட்டத்தை எளிதாக முடிக்கும் திறமை உள்ளவர்கள். இதனால் அந்த அணியிடம் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதேபோல் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. திடீரெனெ மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். சில நேரம் இவ்வளவு மோசமான ஆட்டத்தையா விளையாடுவது என்று சந்தேகம் கொள்ள வைப்பார்கள். இதனால் எந்த நேரத்திலும் பாகிஸ்தான் அணி விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் வாழ்வா சாவா கட்டத்தில் பாகிஸ்தான் அணி எப்போதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. நாளைய ஆட்டத்தை பொறுத்தவரை இந்திய அணியின் பவுலிங்கில் ஒரேயொரு மாற்றம் இருக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரையும் வீழ்த்தினாலே, சீட்டுக் கட்டை போல் சரிந்துவிடுவர்.
அதற்கு இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இருக்க வேண்டிய அவசியம். இந்திய அணியில் உள்ள ஒரேயொரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்றால் அது அர்ஷ்தீப் சிங் மட்டும்தான். வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்திலேயே அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் புதிய பந்தில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் அளவிட முடியாதது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை மட்டுமே சாய்த்துள்ளார். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடரில் அழுத்தமான நேரங்களில் அர்ஷ்தீப் சிங் செயல்பாடுகள் வியக்க வைத்தது. அதேபோல் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் உருவாக்கும் ஆங்கிள் எந்தவொரு பேட்ஸ்மேனையும் எளிதாக திணறடிக்கும்.
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், ரிஸ்வான், சக்கீல் உள்ளிட்டோருக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களி எதிர்கொள்வதிலும் சிக்கல் உள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் ஹர்சித் ராணாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் களமிறங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹர்சித் ராணாவிடம் இன்கன்சிஸ்டன்சி பிரச்சனை உள்ளது.
நாளைய ஆட்டத்தில் சொதப்பினால், இந்திய ரசிகர்களின் மொத்த கோபமும் அவர் பக்கம் திரும்பவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஹர்சித் ராணாவை நீக்கும் முடிவை பயிற்சியாளர் கம்பீர் எடுக்க வேண்டும். மீண்டும் ஃபேவரிட்டிஸம் பார்த்து தோல்வியடைந்தால், இந்தியாவின் ஐசிசி கனவே முடிவுக்கு வந்துவிடும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications