கேப்டனான கேஎல் ராகுல்.. பிசிசிஐ கதவுகளை உடைத்த ருதுராஜ்.. இந்திய அணியில் யாருக்கு இடம்?
மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி ராஞ்சி மைதானத்திலும், டிசம்பர் 3ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்திலும், டிசம்பர் 6ஆம் தேதி 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்திலும் நடக்க உள்ளது.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே துணைக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியின் போது கேப்டன் சுப்மன் கில்லும் காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதனால் இந்திய அணிக்கு யார் கேப்டனாக நியமனம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தேர்வு ஆகி இருக்கின்றனர். விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நம்பர் 4 பேட்ஸ்மேன் போட்டிக்காக திலக் வர்மாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அதேபோல் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாத்வ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட் , பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரெல் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராக அல்லாமல் பேட்ஸ்மேனாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
பும்ரா, சிராஜ் ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தொடரை தொடர்ந்து அக்சர் படேல் வெளியேற்றப்பட்டுள்ளார். இதன் மூலமாக அக்சர் படேலின் செயல்பாடுகள் இந்திய அணி நிர்வாகத்திற்கு போதுமானதாக இல்லை என்று பார்க்கப்படுகிறது. சீனியர் வீரர்கள் இணைந்துள்ளதால், இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications