வரலாறு இதுதான்.. அனுராக் தாகூர் சொன்னதை கவனீச்சிங்களா? இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் முடிவு இதுதானாமே?
அகமதாபாத்: உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் தான் இந்த போட்டியின் முடிவு குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சொன்ன விஷயம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
50 ஓவர் உலககோப்பை போட்டி தொடங்கி இந்தியாவின் பல நகரங்களில் நடந்து வருகிறது. நாளை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் அது ஹைவொல்டேஜ் மேட்சாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதனால் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமின்றி அனைத்து நாட்டு ரசிகர்களும் இந்த போட்டியை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியானது நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
தற்போது நடக்கும் உலககோப்பை தொடரில் இதுவரை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தாங்கள் மோதிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தியாவானது ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி உள்ளது. பாகிஸ்தான் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்துள்ளது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தங்களின் 3 போட்டியில் நாளை சந்திக்கின்றன.
இந்த போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தங்களின் 3வது வெற்றியை பெற போராடும் என்பதால் நாளைய போட்டியில் சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்காது. தற்போதைய பாகிஸ்தான் அணி பவுலிங், பேட்டிங்கில் சிறந்து விளங்குகிறது. அதேபோல் இந்தியாவும் பவுலிங், பேட்டிங்கில் நன்றாக இருக்கிறது. கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்டவர்கள் நல்ல பார்மில் உள்ளன.
மேலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு முதல் 2 போட்டிகளை மிஸ் செய்த தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் குணமடைந்து வலைப்பயிற்சியை தொடங்கி உள்ளார். இதனால் நாளை போட்டியில் அவர் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. இவர் அணிக்கு திரும்பும்போது இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் இன்னும் வலுவாக இருக்கும். அதேபோல் பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டவர்கள் அசத்து வருகின்றனர்.
இப்படி இந்தியா-பாகிஸ்தான் அணிகளை பொறுத்தமட்டில் இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் 50 ஓவர் உலககோப்பை போட்டியை பொறுத்தமட்டில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்றதே கிடையாது. 1975ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த உலககோப்பைகளில் 7 முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதி உள்ளன.
இதில் அனைத்து போட்டிகளிலுமே இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. இப்படி வரலாறு இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இந்த வரலாற்றை மாற்ற பாகிஸ்தான் அணி நாளைய போட்டியில் முயற்சிக்கும். அதேவேளையில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றை தொடர இந்தியா நாளைய தினம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.
மேலும் நரேந்திர மோடி மைதானத்தில் 1 லட்சத்துக்கு 30 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இங்கு நாளைய போட்டி நடக்கிறது. இந்த போட்டியை பல நாட்டு ரசிகர்கள் நேரில் ரசிக்க உள்ள நிலையில் இந்தியர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். இதனால் நாளைய போட்டியில் இந்திய அணிக்கு மைதானத்தில் அதிகப்படியான ரசிகர்களின் ஆதரவும், ஊக்கமும் கிடைக்கும்.
இந்நிலையில் தான் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியா மட்டுமல்ல, உலகமே இந்தியா-பாகிஸ்தான் போட்டியை உற்று நோக்குகிறது. இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. இந்த முறையும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications