இப்போவே தலைசுத்துதே.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. கொழும்பு செல்ல விமான டிக்கெட் ரூ.91 ஆயிரமாம்!
மும்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் கட்டணத்தை விடவும், விமான டிக்கெட் மற்றும் விடுதிகளில் தங்குவதற்கான முன்பதிவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட்டுகளின் விலை வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல் ஹோட்டல்களில் ஒருநாளுக்கு ரூ.36 ஆயிரம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி இலங்கை மண்ணில் நடக்கவுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் மண்ணில் விளையாட இந்திய அணி சம்மதிக்கவில்லை. இதனால் இனி பாகிஸ்தான் அணியும் இந்தியா வராது என்று அப்போதே ஐசிசியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை ஐசிசியும் ஏற்றுக்கொண்டது.

இதனால் ஐசிசி டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியிட்ட போதே, பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கும் என்று தெரிவிக்கப்படது. ஆனால் திடீரென இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாட அந்நாட்டு அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை. இதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க போவதாக பாகிஸ்தான் அணி கூறி இருந்தது.
இதன்பின் ஐசிசி தரப்பில் நேரடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை புறக்கணித்தால் நேரும் விளைவுகள் மிகப்பெரிதாக இருக்கும் என்று எச்சரித்த பின், பாகிஸ்தான் அணி விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளின் வீரர்களும் இலங்கையில் நாளைய ஆட்டத்திற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காக இந்திய ரசிகர்கள் பலரும் இலங்கைக்கு புறப்பட்டுள்ளனர். இந்தப் போட்டியில் விளையாடப் போவதாக பாகிஸ்தான் அணி 6 நாட்களுக்கு முன்பாக அறிவித்ததால், இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த ரசிகர்கள் பலரும் கடைசி நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையில் தங்குவதற்கான ஹோட்டல், பயணிப்பதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை வந்திருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணி போட்டியில் விளையாட உள்ளது உறுதியான அடுத்த நிமிடமே, விமான டிக்கெட் கட்டணங்களும், ஹோட்டலில் தங்குவதற்கான கட்டணமும் உச்சத்திற்கு சென்றுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி கிரிக்கெட்டில் அதிக லாபகரமான ஆட்டமாகக் கருதப்படுவதால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களும் வழக்கத்தை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. வழக்கமாக மும்பையிலிருந்து கொழும்புக்கான நேரடி பயணக் கட்டணம் ரூ.25 ஆயிரம் வரை இருக்கும். ஆனால் இன்று சுமார் ரூ.1 லட்சம் வரை உயர்ந்துள்ளது.
அதேபோல் பெங்களூரில் இருந்து கொழும்பு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் வழக்கமாக ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே இருக்கும். ஆனால் இன்று ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து கொழும்பு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் ரூ.44 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் கொழும்புவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இன்று முதல் திங்கட்கிழமை வரையிலான நாட்களில், ஒரு இரவிற்கான கட்டணம் ரூ.36,400 முதல் ரூ.95 ஆயிரம் வரை உள்ளது. அதேபோல் இலங்கைக்கு நேரடியாக செல்லாமல் 2 ஸ்டாப்களில் நிறுத்தப்பட்டு விமானம் சென்றால், வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் அளிக்க வேண்டி உள்ளதாகவும் புலம்பி வருகின்றனர்.
ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட் கட்டணம் குறைவாகவே உள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக ரூ.837ஆகவும், அதிகபட்ச கட்டணமாக ரூ.1,81,818ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் விலையாக ரூ.1,034, ரூ.2,024, ரூ.2,421, ரூ.4,286 ஆகிய உள்ளது. இதனால் போட்டிக்கான டிக்கெட் விலையை விடவும் பயணத்திற்கு, தங்குமிடத்திற்கும் ரசிகர்கள் அதிகமாக செலவழிக்க வேண்டிய சூழல் நேர்ந்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications