அவர் எல்லாம் மேட்ச் வின்னர் கிடையாது.. பாபர் அசாமை விட்டு விளாசிய பாகிஸ்தான் ஜாம்பவான்.. அட்டாக்

Subscribe to Oneindia Tamil

துபாய்: பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து முதல் ஆளாக போட்டியை நடக்கும் பாகிஸ்தான் அணியே வெளியேறி உள்ளது. நேற்று இந்தியாவிற்கு எதிரான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

சாம்பியன் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. பாபர் அசாம் அவுட் ஆன பின் அப்படியே நேற்று மேட்ச் மாறியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தான் பேட்டர் ஜமானுக்குப் பதிலாக இமாம்-உல்-ஹக்கைக் அந்த அணி எடுத்தது. அதே நேரத்தில் இந்தியா இந்த ஆட்டத்தில் அதே லெவன் அணியை வைத்து ஆடியது.

champions trophy 2025 IND vs PAK 2025

பாகிஸ்தான் அணி

இன்று ஆடும் பாகிஸ்தான் அணியில் இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (c & wk), சல்மான் ஆகா, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது ஆகியோர் ஆடினர்.

இந்தியா அணி:

இன்று ஆடும் இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேட்ச்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடினர்.

நேற்று பாகிஸ்தான் நிர்ணயம் செய்த 242 ரன்களை இந்தியா எளிதாக எட்டியது, 7.3 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் எளிதாக கோலி சதம் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெறுவது உறுதியாகிவிட்டது.

பாகிஸ்தான் அணி எலிமினேஷன் ஆவது உறுதியாகி உள்ளது. நேற்று பேட்டிங்கில் கோலி (100*), ஷ்ரேயாஸ் ஐயர் (56), ஷுப்மன் கில் (46) ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர். பந்து வீச்சில், குல்தீப் யாதவ் 3/40 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா இன்னும் பாகிஸ்தானிடம் தோற்கவே இல்ல. அந்தப் போட்டிக்குப் பிறகு வரிசையாக 6-0 என்று இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

நேற்று பாகிஸ்தான் அணியில் ஷகீல் மட்டும் 62 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் அவுட் ஆனது இந்திய அணிக்கு சாதகமாக மாறியது.

பாபர் அவுட் ஆனது எப்படி?

நேற்று இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் திணறிய இந்திய அணி ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இன்னிங்ஸின் 5வது ஓவரில் பந்துவீசும்போது முகமது ஷமி தனது வலது காலில் காயம் ஏற்பட்டது போல கஷ்டப்பட்டு நடந்தார். அவரால் நடக்க முடியாமல் திணறினார். அவர் இப்படி திணறியதால் பிசியோ அவரை சோதனை செய்தார். இதனால் ஆட்டத்திற்கு இடையே அவ்வப்போது ஷமியை பிசியோ சரிபார்த்து வருகிறார். அவருக்கு காலில் தசை பிடிப்பு போல ஏற்பட்டு உள்ளது. இதனால் அடுத்த ஓவரில் ஷமிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவிற்கு ஓவர் கொடுக்கப்பட்டது.

ஹர்திக் வந்த நேரம் ஆட்டம் மாறியது. தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் நிதானமாக ஆடியது. ஆனால் இப்போது திணற தொடங்கி உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் முதல் பந்தில் பாபர் அசாம் பவுண்டரி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த பந்திலேயே பாபர் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா எடுத்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போடப்பட்ட பேக் ஆஃப் லெங்த் டெலிவரி பந்தை பாபர் கவர் டிரைவ் அடிக்க முயன்றார்.

ஆனால் பந்தை சரியாக கணிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பாபர் 26 பந்துகளில் 23 ரன்களில் வீழ்ந்தார். இதையடுத்து ஸ்டன் ஆகி பார்த்த பாபர் அவுட்டை டாட்டா காட்டி அனுப்பி வைத்தார் ஹர்திக் பாண்டியா.

பாபர் விமர்சனம்

பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் முகமது ஹபீஸ் பாபர் அசாமை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் வைத்துள்ள விமர்சனத்தில், பாபர் அசாம் இன்சமாம் உல் ஹக்கைப் போல மேட்ச் வின்னர் அல்ல. இக்கட்டான சூழ்நிலையில் பாகிஸ்தானுக்காக இன்சமாம் போட்டிகளை வெல்வது வழக்கம். இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் கூட பாபர் பாகிஸ்தானை வெல்ல வைக்கும் அளவிற்கு ஆடியது இல்லை.

சேனாவில் நடக்கும் ஆட்டத்தில் அவர் எப்போதாவது தொடர் நாயகன் விருதை வென்றுள்ளாரா? ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணிக்காக அவர் ஏதேனும் ஒரு போட்டியில் வென்றாரா? நாம் வெளியேறி மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஐசிசி போட்டிகளில் நமக்காக ஆட்டத்தை வெல்லக்கூடிய வீரர்களை நாங்கள் தேர்வு செய்ய வேண்டும், என்று பாபர் அசாமை விமர்சனம் செய்துள்ளார் இன்சமாம் உல் ஹக்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+