உஸ்மான் தாரிக் பவுலிங் ஆக்ஷனை பிரதி எடுத்த சூர்யகுமார் யாதவ்.. திணறிப்போன இந்திய பேட்ஸ்மேன்கள்!
கொழும்பு: பாகிஸ்தான் அணியின் ஸ்பின்னரான உஸ்மான் தாரிக்கின் பவுலிங் ஆக்ஷனை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பிரதி எடுத்திருப்பது கவனம் பெற்றுள்ளது. உஸ்மான் தாரிக் சமாளிக்க இந்திய அணி பேட்ஸ்மேன்களின் பயிற்சியின் போது தயாராகி வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் அணியின் உஸ்மான் தாரிக் பவுலிங் திருப்புமுனையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை மாலை கொழும்பு மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய பேட்ஸ்மேன்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் பிரபல ஸ்பின்னரான உஸ்மான் தாரிக்கை சமாளிக்க பயிற்சி மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போது உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அப்போது உஸ்மான் தாரிக்கின் பவுலிங் ஆக்ஷன் பலரின் கவனத்தை ஈர்த்து புதிய விவாதத்தை உருவாக்கியது. ஏனென்றால் ஸ்லிங்கி ஆக்ஷனுடன் கூடுதல் நேரத்துடன் ஒரு ஸ்டாப் கொடுத்து பந்தை பேட்ஸ்மேனை நோக்கி வீசுகிறார்.
அதாவது 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அஸ்வின் கடைசி பந்தை வீசுவதற்கு முன்பாக ஒரு சிறிய பாஸ் கொடுத்து பந்தை வீசுவார். அதனை விடவும் கூடுதல் நேரம் எடுத்து உஸ்மான் தாரிக் பவுலிங் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி விதிகளுக்கு உட்பட்டு இப்படியொரு பாஸ் கொடுத்து பவுலிங் செய்வது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
அதுவும் ஸ்லிங்கில் பவுலிங் ஆக்ஷன் என்பதால், பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க தடுமாறி வருகின்றனர். இவரின் பவுலிங் ஆக்ஷனுக்கு இந்திய ஜாம்பவான் அஸ்வினும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனிடையே நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் எராஸ்மஸ் ஸ்பின்னுக்கு இந்திய வீரர்கள் திணறினர். இதனால் உஸ்மான் தாரிக்கை எச்சரிக்கையாக அணுக இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
அதற்கேற்ப இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அப்படியே உஸ்மான் தாரிக்கின் பவுலிங் ஆக்ஷனை பிரதி எடுத்து பயிற்சியில் வீசுகிறார். அவரை எதிர்த்து இஷான் கிஷன், அபிஷேக் சர்மா உள்ளிட்டோர் பேட்டிங் ஆடுகின்றனர். இதனை வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் முகமது இர்ஃபானை சமாளிக்க இந்திய பேட்ஸ்மேன்கள் இப்படி பயிற்சி எடுத்தனர். இதனால் நாளை உஸ்மான் தாரிக் பவுலிங்கை இந்திய அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உஸ்மான் தாரிக் பவுலிங் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications