பாகிஸ்தான் அணியின் விருப்பம் அதுதானா.. அபிஷேக் சர்மா விளையாடுவாரா? சூர்யகுமார் யாதவ் பதில்!
கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலககோப்பை போட்டியில் அபிஷேக் சர்மா களமிறங்க உள்ளதை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உறுதி செய்திருக்கிறார். பாகிஸ்தான் அணி வீரர்கள் அபிஷேக் சர்மா விளையாட வேண்டும் என்று விரும்புவதாக கூறிய சூர்யகுமார் யாதவ், நிச்சயமாக அவர் களமிறங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக நடந்து வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை கொழும்பு மைதானத்தில் நடக்கவுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போதே அவருக்கு உடல்நலப் பிரச்சனை இருந்தது. இதன் காரணமாக நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடவில்லை. இரு போட்டிகளுக்கும் இடையில் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனைக்காக சிகிச்சைப் பெற்றுக்கொண்ட அபிஷேக் சர்மாவின் உடல் எடையும் குறைந்தது. இதன்பின் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் போதுமான அளவிற்கு ஓய்வு அளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்தது. அவரின் கம்பேக்கை கம்பீர் தீவிரப்படுத்த விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்தது. அதேபோல் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலியும், இந்தியாவின் வலிமையான அணிக்கு எதிராக விளையாட விரும்புகிறோம். அவர் சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் நாளை விளையாடுவார் என்று நம்புகிறேன் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணி வீரர்கள் அபிஷேக் சர்மாவை எதிர்த்து விளையாடினால்.. சரிதான்.. அவர் நாளை களமிறங்குவர் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அபிஷேக் சர்மா பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று தெரிகிறது. அதேபோல் சஞ்சு சாம்சன் பெஞ்ச் செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications