இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான்.. பட்டாசு + இனிப்புடன் சென்னை உள்பட நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்
கொழும்பு: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வியை தழுவியது. இதையடுத்து சென்னை மெரினா உள்பட நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் இந்தியாவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
டி20 உலககோப்பை போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் தொடக்க வீரரான இசான் கிஷன் தன்னுடைய அதிரடியாக விளையாடினார். 10 பவுண்டரி, மூன்று சிக்சருடன் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
இந்தியா வெற்றி
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தடுமாறியது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது. பாகிஸ்தான் அணி 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டை பறிகொடுத்தது. இறுதியாக பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களில் சுருண்டது 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதோடு இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
சென்னையில் கொண்டாட்டம்
இந்நிலையில் தான் இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை மெரினாவில் எல்இடி ஸ்கிரீனில் ரசிகர்கள் கிரிக்கெட் பார்த்தனர். மொத்தம் 3 இடங்களில் ஸ்கிரீன் வைக்கப்பட்டு இருந்தது.
இந்தியா வென்றதும் அவர்கள் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பட்டாசு வெடித்து இந்தயி அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பட்டாசு +இனிப்பு
மகாராஷ்டிரா, கேரளா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்பட நாடு முழுவதும் இந்திய ரசிகர்கள் தேசியக்கொடியை கைகளில் ஏந்தியும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் ஊட்டியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்த போட்டியின்போதும் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கைக்குலுக்கி கொள்ளவில்லை. கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல் அதற்கு பதிலடியாக நம் நாடு மேற்கொண்ட ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் இருநாடுகள் இடையேயான உறவு மேலும் மோசமாகி உள்ளது. இப்படியான சூழலில் தான் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைக்குலுக்குவதை தவிர்த்து வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications