நாளை இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்களா? கேப்டன் சல்மான் அலி பதில்!
மும்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்களா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பதில் அளித்துள்ளார். கிரிக்கெட் போட்டி எப்படி விளையாடப்பட வேண்டுமோ, அப்படிதான் விளையாடப்பட வேண்டும் என்று கூறிய சல்மான் ஆகா, இந்திய வீரர்கள் முன் வந்தால் நாங்கள் கைகுலுக்க எப்போதும் தயாராகவே உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளது. ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் விளையாடுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்கவில்லை.

இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் சங்கத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று இந்திய வீரர்கள் கூறிவிட்டனர். இதனால் மோசின் நக்வி ஆசியக் கோப்பையுடன் பறந்துவிட்டார். தற்போதும் கூட ஐசிசியின் சில வார்னிங்கிற்கு பின் இந்திய அணியுடன் விளையாட பாகிஸ்தான் அணி ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா செய்தியாளர்களை சந்தித்த போது இரு அணிகளும் கைகுலுக்குவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், கிரிக்கெட்டை சரியான மனநிலையுடன் விளையாட வேண்டும். எனது தனிப்பட்ட கருத்து முக்கியம் இல்லாவிட்டாலும், கிரிக்கெட் எப்போதும் எப்படி விளையாடப்பட வேண்டுமோ, அப்படியே விளையாடப்பட வேண்டும்.
என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது அவர்களிடம் தான் உள்ளது என்று தெரிவித்தார். இந்தியா விரும்பினால் தனது அணி கைகுலுக்குவதற்கு தயாராக இருக்கும் என்பதையும் சூசகமாகத் தெரிவித்தார். இந்த விஷயத்திற்காகவும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி கூடுதலாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக தயாராகி இருக்கின்றனர். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் வென்றதால், பாகிஸ்தான் அணியை வீழ்த்திவிட்டு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று தீவிரமாக உள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications