Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல கோடி காலியாகிடும்.. ஐபிஎல் ஃபைனல் முடிந்து கோப்பை தர தாமதம் ஆனது ஏன் தெரியுமா? இதுதான் காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா அணி வென்று சாம்பியன் ஆகி உள்ளது. ஆனால் நேற்று இதற்கான கோப்பையை வழங்க நீண்ட நேரம் எடுத்தது.. அது ஏன் தெரியுமா?

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி நடந்தது. இந்த சீசன் முழுக்கவே இரண்டு அணிகள்தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தின. கம்பீரின் வருகைக்கு பின் கொல்கத்தா அணியின் நிறமே மாறிவிட்டது.

IPL 2024 SRH vs KKR Why did it take so many hours to give the title to Kolkatta Knight Rirder after the final

கம்பீரின் கேப்டன்சியில் ஆடியது போலவே இந்த முறை கொல்கத்தா அணி ஆடியது. அதோடு முதல் ஆளாக பிளே ஆப் சென்று, அதோடு இறுதிப்போட்டிக்கு சென்றது. தொடக்கத்திலேயே 200+ ஸ்கோர்களாக ஹெட், கெல்சன் அதிரடியில் அடித்த ஹைதராபாத் அணி ராஜஸ்தானை வீழ்த்தி பைனல் வந்தது.

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடந்த சீசன்களில் தரையில் கிடந்த ஹைதராபாத் அணியை மீட்டு பைனல் கொண்டு சென்றார்.

மோசமான ஆட்டம்: ஆனால் நேற்று பைனலுக்கு உண்டான எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஆட்டம் முடிந்தது. இது லோ ஸ்கோரிங் மேட்ச். லோ ஸ்கோரிங் திரில்லர் ஆக இருந்தால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் அப்படி எந்த திரில்லும் இல்லாமல் ஆட்டம் நேற்று முடிந்தது.

நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணி எந்த விதமான அதிரடியும் காட்டாமல் 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து சுருண்டது. ஹெட், கெல்சன், அபிஷேக் சர்மா, திரிப்பதி, ஷாபாஸ் அகமது, என்று யாருமே பெரிதாக அந்த அணியில் அதிரடி காட்டவில்லை.

கொல்கத்தா அணியின் பவுலிங் அவ்வளவு சிறப்பாக இருந்தது. பவர் பிளெயிலேயே துல்லியமாக தனது யார்க்கர், லைன் பந்துகள் மூலம் ஸ்டார்க் பிரஷர் போட்டார். அதோடு 2 விக்கெட்டும் எடுத்தார். 6 ஓவர்களில் 40 ரன்கள் கூட எடுக்க முடியாமல் போன போதே ஹைதராபாத்தை அணி பேக் சீட்டிற்கு போனது.

அதன் ரசல் யோசிக்கவே முடியாத படி அவுட் ஆப் சிலபஸ் ஆக வந்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஸ்லோ பால், ஷார்ட் பால், யார்க்கர் என்று மாற்றி மாற்றி வீசி விக்கெட்டுகளை எடுத்தார். நேற்று கொல்கத்தா அணியில் பவுலிங் செய்த எல்லோருமே விக்கெட்டுகளை எடுக்க ஹைதராபாத் அணி எந்த விதமான அதிரடியும் காட்டாமல் 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து சுருண்டது.

கொல்கத்தா வெற்றி: இதையடுத்து இறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே ஓவருக்கு 10 அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து.. எந்த விதமான திரில்லிருக்கும் இடம் கொடுக்காமல் அடித்து ஆடியது.

மெதுவாக ஆட வேண்டும் என்று யோசிக்காமல் குர்பாஸ் 39 ரன்கள் எடுக்க, வெங்கடேஷ் 52 ரன்கள் எடுக்க, வெறும் 10.3 ஓவரில் 114-2 ரன்கள் எடுத்து எளிதாக கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக கொல்கத்தா சாம்பியன் ஆகி உள்ளது.

ஏன் லேட்: ஆனால் நேற்று இதற்கான கோப்பையை வழங்க நீண்ட நேரம் எடுத்தது.. அது ஏன் தெரியுமா? நேற்று மேட்ச் 10.26க்கு எல்லாம் முடிந்துவிட்டது. திட்டமிட்டபடி 1 மணி நேரம் கூடுதலாக நடந்திருக்க வேண்டும். அப்போதுதான் விளம்பரம் கொடுத்த ஸ்பான்சர்களுக்கு பலன்.

இல்லையென்றால் அது மிகப்பெரிய இழப்பாக, பல கோடி ரூபாய் இழப்பாக முடியும். இதை ஈடுகட்டவே வேறு வழியின்றி கோப்பை கொடுப்பதை 1 மணி நேரம் தாமதம் ஆக்கினார்கள். கோப்பை கொடுத்துவிட்டால் மக்கள் அமர்ந்து பார்க்க மாட்டார்கள். இல்லையென்றால் கோப்பை கொடுக்கும் வரை மக்களை அமர்ந்து சேனல் பார்ப்பார்கள் என்பதால் அதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பி உள்ளனர்.,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+