ரஜினி அன்று செய்ததை.. இன்று களத்தில் செய்த தோனி.. களத்தில் ரசிகர்களை ஸ்டன் ஆக்கிய தல!
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தோனி செய்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றது.
லிங்கா படம் வெளியான சமயம் அது. நடிகர் ரஜினிகாந்த் கடுமையான உடல்நல பிரச்சனையில் இருந்து.. அமெரிக்காவில் சிகிச்சை எல்லாம் எடுத்துவிட்டு சினிமாவிற்கு மீண்டும் திரும்பினார். அப்போது அவரால் நடிக்க முடியுமா என்ற கேள்வி, விவாதம் நிலவியது. இப்படி உடல்நிலை பிரச்சனைக்கு பின் வெளியே வந்த ரஜினிகாந்த் லிங்கா என்ற படத்தை எடுத்தார்.
படம் ஓடவில்லை. ஆனால் ரசிகர்கள் ஹாப்பி. ரஜினி நன்றாக இருக்கிறார்.. அவரால் நடக்க ஓட சண்டை போட முடிகிறது என்று நம்பிக்கையை அது கொடுத்தது. அந்த படத்தை கூட.. அவர் வெற்றிபெற வேண்டும் என்று எடுக்கவில்லை. அதாவது.. தனது ரசிகர்களிடம் நான் இருக்கிறேன்.. அதுவும் நன்றாக இருக்கிறேன்.. இந்த குதிரை விழுந்தாலும் எழுந்து ஓடும் என்று சொல்வதற்காக எடுக்கப்பட்ட படம் என்றே கூறப்பட்டது.
அப்படி ஒரு சம்பவம் இன்று களத்தில் நடந்தது. அன்று ரஜினி செய்ததை இன்று தோனி செய்தார். ஆம் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தோனி செய்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றது.

தோனி என்ன செய்தார்
11 ஓவரில் இன்று நூர் பவுலிங் செய்த போது கீப்பிங்கில் தோனி கொஞ்சம் சொதப்பினார். கைக்கு வந்த பந்தை மிஸ் செய்தார். இதனால் அந்த பந்து பவுண்டரி போனது. அதை பார்க்க.. தோனி ஸ்லோ ஆகிவிட்டார் என்று சொல்ல தோன்றியது.
அவரிடம் வேகம் இல்லையே. அவர் இன்னும் வேகமாக பிடிப்பார்.. எப்படி மிஸ் செய்தார் என்று பலரும் கேட்கும் அளவிற்கு இருந்தது. அதிலும்.. தோனி வேகம் முடிந்துவிட்டது என்று கமெண்ட் அடிக்கும் நிலையில் இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த பந்திற்கும் அடுத்த பந்திலேயே சூர்ய குமார் யாதவை தோனி ஸ்டம்பிட் செய்தார்.
அதிலும் 1 நொடிக்கும் குறைவாக.. மில்லி செகண்ட் வேகத்தில் தோனி அந்த ஸ்டம்பிட்டை எடுத்தார். அப்போதுதான் துண்டு ஒரு தடவைதான் தவறும் என்று சொல்லும் அளவிற்கு அவரின் ஆட்டம் இருந்தது. தனது ரசிகர்களிடம் நான் இருக்கிறேன்.. அதுவும் நன்றாக இருக்கிறேன்.. இந்த குதிரை விழுந்தாலும் எழுந்து ஓடும் என்று ரஜினி சொல்லாமல் சொன்னது போலவே.. இனி தோனி சொன்னது போல அவரின் ஸ்டம்பிட் அமைந்து இருந்தது. அவரின் வேகம்.. அவரின் துல்லியம் இன்னும் குறையவில்லை என்பதற்கு சரியான உதாரணமாக இந்த மேட்ச் இருந்தது.
மேட்ச் நிலவரம்
இன்று நடக்கும் சிஎஸ்கே மேட்சில் ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், எம்எஸ் தோனி , ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை அணியில் ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், சத்தியநாராயண ராஜு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications