யாரும் நம்பலைன்னா என்ன? ஷ்ரேயாஸ் ஐயராக இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? சொல்லி சொல்லி அடிக்கிறாரே
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் தனது கொடூரமான பார்மை மீண்டும் தொடருகிறார்
ஷ்ரேயாஸ் ஐயர். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆடிய அதே பார்மை ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரிலும் தக்க வைத்துள்ளார்.
நேற்று லக்னோவிற்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி பெற்றது. நேற்று முதலில் இறங்கிய லக்னோ 20 ஓவரில் 171/7 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய பஞ்சாப் எளிதாக 16.2 ஓவரிலேயே 177/2 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

பஞ்சாப் அணியில்
பிரப்சிம்ரன் சிங் 69
ஷ்ரேயாஸ் ஐயர் 52
நேஹால் வதேரனோட் 43 ஆகியோர் அசத்தலாக ஆடி வெற்றியை உறுதி செய்தனர். அதிலும் ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்காமல் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆடிய அதே பார்மை ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரிலும் தக்க வைத்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயராக இருப்பது ஏன் கடினம்?
ஷ்ரேயாஸ் ஐயராக இருப்பது என்பது மிகவும் கடினம். ஆனால் என்னதான் பிரச்சனையாக இருந்தாலும் அவர் ஒவ்வொரு போட்டியிலும் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.
50 ஓவர் உலகக் கோப்பை தோல்விக்கு பின் கைகுலுக்க வந்த பிரதமர் மோடியிடம் அவர் கொடுத்த ரியாக்சனில்தான் தொடங்கியதுதான் இந்த பிரச்சனைகள் எல்லாம். தோல்வி பெற்ற கோபத்தில் இருந்த அவர்.. முகத்தை திருப்பிக்கொண்ட செயல் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. அவர் செயல் சரியில்லை என்று கூறி அவரை அணியில் இருந்து நீக்கும்படி பலரும் கோரிக்கை வைத்தனர்.
சில நாட்களில் அவரின் பிசிசிஐ ஒப்பந்தம் நீக்கப்பட்டது. அவர் மும்பைக்காக ரஞ்சி கோப்பை ஆடவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. மற்ற டாப் வீரர்கள் ஆடாத போது இவர் மட்டும் ஆட வேண்டும் என்று பிரஷர் தரப்பட்டது. அவருக்கு காயம் இருந்த போதும் பிரஷர் தரப்பட்டு அவர் ஆடவில்லை என்றதும்.. ஒப்பந்தம் நீக்கப்பட்டது.
கடைசியில் மீண்டும் கோலி காயம் காரணமாக வேறு வழியின்றி ஷ்ரேயாஸ் ஐயர் வீட்டு வாசலில் பிசிசிஐ நின்றது. அப்படி அணிக்கு வந்தவர்.. கடந்த சாம்பியன்ஸ் லீக் தொடர்க்கும் தேர்வானார். அந்த சீசன் முழுக்க அவர்தான் அதிரடியாக ஆடினார். 243 ரன்கள் எடுத்து அதிக ரன்களோடு பிசிசிஐக்கு தரமான பதிலடியும் தந்தார்.

ஆனால் இன்னொரு பக்கம் அவர் கொல்கத்தா அணியை ஐபிஎல் தொடரிலும் கம்பீருக்கு பின் வெற்றிபெற வைத்தார். கடந்த சீசனில் பல அணிகளை துவம்சம் செய்து கொல்கத்தா அணியை வெற்றிபெற வைத்தார். ஆனால் வெற்றி கேப்டனை அடுத்த சீசனிலேயே கொல்கத்தா ரிலீஸ் செய்தது.
இதெல்லாம் ஷ்ரேயாஸ் ஐயருக்கு மட்டுமே நடக்கும். ஒரு வெற்றி கேப்டனை ரிலீஸ் செய்வது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதையும் சகித்துக்கொண்டு இப்போது பஞ்சாப் அணியை அடுத்தடுத்து வெற்றிபெற வைத்துள்ளார்.
ஆனால் மற்ற வீரர்கள் போல ஷ்ரேயாஸ் ஐயர் அடிக்கடி இணையத்தில் புலம்ப மாட்டார். எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று மறைமுகமாக நேரடியாக போஸ்டுகளை போட மாட்டார். தோனி போல அதிக பேசாமல் இப்போது செயலில் மட்டுமே
காட்டி வருகிறார். இதே வேறு வீரருக்கு நடந்திருந்தால் பிஆர் வைத்து டிரெண்ட் ஆகி இருப்பார். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் ஷ்ரேயாஸ் ஐயர் தனது பேட்டை பேச வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications