பிசிசிஐ ஆடிய சித்து விளையாட்டு.. சிஎஸ்கே அணிக்கு எதிரான ஒரு ரூல்.. தொடர் தோல்விகளுக்கு இப்படி காரணமா
சென்னை: 2025 ஐபிஎல் சீசனில் நடந்த முதல் ஆட்டத்தை தவிர வரிசையாக அடுத்தடுத்த ஆட்டங்களில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு பின்பாக பிசிசிஐ கொண்டு வந்த முக்கியமான ஒரு விதியும் காரணம் என்று கூறப்படுகிறது.
ஏப்ரல் 7, 2025 வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதலில் மார்ச் 23, 2025: சிஎஸ்கே vs. மும்பை இந்தியன்ஸ் (MI) இடையே மேட்ச் நடந்தது
இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
முடிவு: சிஎஸ்கே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
MI 20 ஓவர்களில் 155/9 எடுத்தது.
சிஎஸ்கே 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வென்றது,.
ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களும், ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேட்ச் 2:
மார்ச் 28, 2025: சிஎஸ்கே vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இடையே மேட்ச் நடந்தது.
இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
முடிவு: சிஎஸ்கே 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
சிஎஸ்கே பவுலிங் சொதப்பியது. சிஎஸ்கே அணியின் பேட்டிங்கும்.. முக்கியமாக மிடில் ஆர்டர் சொதப்பியது.
மேட்ச் 3:
மார்ச் 30, 2025: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) இடையே மேட்ச் நடந்தது.
இடம்: பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
முடிவு: சிஎஸ்கே 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
கடும் போட்டி நிலவிய ஆட்டத்தில், சிஎஸ்கே 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இதிலும் பவுலிங், மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியது.
மேட்ச் 4:
ஏப்ரல் 6, 2025: சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ் (டிசி) இடையே ஆட்டம் நடந்தது.
இடம்: அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி
முடிவு: சிஎஸ்கே 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
பவர்பிளேயின் போது சிஎஸ்கேயின் டாப் ஆர்டர் சரிந்தது, ஆறு ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
விஜய் சங்கர் (69*) மற்றும் MS தோனி (30*) இடையே வலுவான 84 ரன்கள் ஆட்டமிழக்காமல் பார்ட்னர்ஷிப் இருந்தபோதிலும் டெஸ்ட் பேட்டிங் செய்ததால் தோல்வி அடைந்தது. 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே 1 வெற்றி மற்றும் 3 தோல்விகளை சந்தித்துள்ளது.
சிஎஸ்கே தோல்வி
2025 ஐபிஎல் சீசனில் நடந்த முதல் ஆட்டத்தை தவிர வரிசையாக அடுத்தடுத்த ஆட்டங்களில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு பின்பாக பிசிசிஐ கொண்டு வந்த முக்கியமான ஒரு விதியும் காரணம் என்று கூறப்படுகிறது.
பிசிசிஐ சார்பாக எல்லா மைதானங்களுக்கும் சென்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. பிட்ச் பவுலிங் பிட்ச்சாக இருந்தது அதை உடனே மாற்றும்படி கூறி உள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானம் ஸ்பின் பிட்சாக இருந்தது. இதனால் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றது. ஆனால் அதன்பின் பிசிசிஐ பிட்சை ஆய்வு செய்து.. அதை பேட்டிங் செய்யும்படி மாற்றி கூறியது. அப்போதுதான் இந்த சீசன் சுவாரசியமாக இருக்கும்.. லோ ஸ்கோர் ஆட்டங்கள் சீக்கிரம் முடிந்தால் விளம்பரம் சிக்கலாகும் என்பதால் இந்த முடிவை எடுக்க சொன்னது. இதே சோதனை மற்ற பிட்சுகளில் செய்யப்பட்டது.
ஆனால் சிஎஸ்கே அணி எடுக்கப்பட்டது ஸ்பின் பவுலிங்கை மனதில் வைத்து. இதனால் தற்போது அணிக்கு சிக்கலாகி உள்ளது. இந்த சிக்கலை சரி செய்ய குறைந்தது 1 வாரம் ஆகும். அந்த சிக்கல்கள் சரி செய்யப்பட்ட பின் அணி மீண்டும் பார்மிற்கு வரும். ஆர்டர் மாற்றப்பட்ட பின் அணி மீண்டும் வெற்றி பக்கம் திரும்பும்.












Click it and Unblock the Notifications