ருத்துராஜாக இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? சிஎஸ்கே டீம் மறைமுகமாக வைத்த செக்.. இதெல்லாம் கொடுமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் இதற்கு காரணம் என்று சொல்ல முடியாது. அவர் ஒரு கேப்டனாக நன்றாகவே செயல்படுகிறார்.

ஒரு கேப்டன் சில இடங்களில் தவறுகளை செய்வார். அதேபோல் ருத்துராஜ் கெய்க்வாட் எல்லா கேப்டனையும் போல சில இடங்களில் ஆங்காங்கே தவறுகளை செய்கிறார். அது பெரிய அளவில் அணியை பாதிப்பது இல்லை. அதே சமயம் ஒரு கேப்டனாக பேட்டிங்கில் அவர் சிறப்பாகவே ஆடுகிறார்.

ருத்துராஜ் கெய்க்வாட் மட்டும்தான் நேற்று சிஎஸ்கே வெல்ல வேண்டும் என்று intent உடன் ஆடினார். நேற்று கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் மட்டும் நம்பிக்கையோடு விடாமல் ஆடினார். 44 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்ஸ் என்று 63 ரன்கள் எடுத்தார். தேவையான நேரத்தில் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடி ஆட்டத்தை சரிவில் இருந்து மீட்டார்.

அவர் அவுட் ஆன பின் தோனி - ஜடேஜா நிதானமாக ஆடினர். கடைசி 4 ஓவர்களில் இதனால் தோனி நிதானமாக ஆடி ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றார். ஆனால் அணியை அவர்களால் வெல்ல வைக்க முடியவில்லை.

மறைமுக அழுத்தம்

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் இதற்கு காரணம் என்று சொல்ல முடியாது. அவர் ஒரு கேப்டனாக நன்றாகவே செயல்படுகிறார்.

IPL 2025 How is being Ruturaj Gaikwad very difficult due to the pressures from CSK

1. சிஎஸ்கே கேப்டனாக ருத்துராஜ் விரும்பிய வீரர்களை எடுக்க முடியவில்லை. லெகசி என்பதற்காக அஸ்வினை எடுத்தனர். அஸ்வின் பவுலிங், பேட்டிங்கில் பார்மில் இல்லை.

2. அவரை எடுத்த 10 கோடி ரூபாய்க்கு இன்னும் சிறப்பாக சிஎஸ்கே வேறு வீரர்களை எடுத்து இருக்க முடியும். முக்கியமாக மிடில் ஆர்டரில் ஆட ஆல் ரவுண்டர் பவர் ஹிட்டரை எடுத்திருக்க முடியும்.

3. ஆனால் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு அப்படி ஒரு அணியை சிஎஸ்கே டீம் வழங்கவில்லை.

4. ருத்துராஜ் கெய்க்வாட் தோனியை எதுவும் செய்ய முடியாது. ஆனால் அணிக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருப்பது தோனிதான். அவரை வைத்துக்கொள்ள வேண்டிய பிரஷரை சிஎஸ்கே அணிதான் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு கொடுக்கிறது.

Take a Poll

5. முன்பெல்லாம் மோசமான நேரத்தில் இறங்கி மேட்சை மெதுவாக கொண்டு சென்று அப்பறம் வேகம் எடுப்பார். ஆனால் இப்போதெல்லாம் மேட்சை முடிக்கும் எண்ணம் தோனியிடம் இல்லை. சிக்ஸ் அடித்து ஷோ காட்டினால் போதும் என்று ஆடுகிறார்.

6. கடைசி ஓவரில் சில பந்துகள் வரை சிக்ஸ், பவுண்டரி அடிக்க கூட பயப்படுகிறார். முன்பெல்லாம் பழைய ஐபிஎல் காலத்தில்.. மேட்ச் முடிந்த பின் யார் நீண்ட தூரம் சிக்ஸ் அடிக்கிறார்கள் என்ற போட்டி நடத்தப்படும். பந்தை டாஸ் செய்து சிக்ஸ் யார் தூரமாக அடிக்கிறார்கள் என்று பார்ப்பார்கள். அப்படித்தான் இப்போது மேட்சை பற்றி யோசிக்காமல் தோனி ஆடிக்கொண்டு இருக்கிறார். இப்படி ஒரு வீரரை தூக்க முடியாத நிலையில் சிஎஸ்கே உள்ளது.

7. அதேபோல் மிடில் ஆர்டரில் உள்ள வீரர்களை தூக்கவும், வைத்துக்கொள்ளவும் முடியாத அளவிற்கு மோசமான ஏலத்தை மேற்கொண்டு உள்ளது சிஎஸ்கே. இந்த அணியை வைத்து பழைய ஐபிஎல் போட்டிகளில் வேண்டுமானால் வெல்ல முடியும். ஆனால் இளம் படைகளை வைத்து இருக்கும் ராஜஸ்தான், ஹைதராபாத் போன்ற அணிகளை இந்த சீசனில் எதிர்கொள்ள இந்த அணி போதுமானதாக இருக்காது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+