பெர்முடா முக்கோணத்தை விட புதிரான விஷயம்! விஜய் சங்கருக்கு மட்டும் எப்படிங்க தொடர் வாய்ப்பு வருது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலான நேரங்களில் எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை. ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. சர்வதேச அளவில் பெர்முடா முக்கோணம்தான் பெரிய புதிர் என்பார்கள்.

ஆனால் இங்கே அதைவிட புதிரான விஷயம் என்றால் அது விஜய் சங்கருக்கு கிடைக்கும் வாய்ப்புகள்தான. அவரின் சில மோசமான ஆட்டங்களைப் பற்றிய விவரங்கள் இங்கே தரப்பட்டு உள்ளன. விஜய் சங்கருக்கு மட்டும் எப்படி விடாமல் வாய்ப்புகள் வருகின்றன என்பது சொல்ல முடியாத புதிராக உள்ளது.

IPL 2025 How is CSK player Vijay Shankar getting chances over and over again

சர்வதேச கிரிக்கெட் சொதப்பல்

2019 உலகக் கோப்பை: விஜய் சங்கர் இந்திய அணியின் நம்பர் 4 இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டார், ஆனால் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி, 58 ரன்கள் (சராசரி: 29) எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். ​

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சொதப்பல்

2019 ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி, 244 ரன்கள் (சராசரி: 20.33) மட்டுமே எடுத்தார், மற்றும் ஒரு விக்கெட் பெற்றார். இந்த மோசமான ஆட்டம் ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது.. ​

2022 ஐபிஎல்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி, 19 ரன்கள் (சராசரி: 4.75, ஸ்ட்ரைக் ரேட்: 54.29) மட்டுமே எடுத்தார். மேலும், 9 பந்துகள் வீசியும் எந்த விக்கெட்டும் பெறவில்லை. ​

2024 ஐபிஎல்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 10 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார், இது ரசிகர்களிடையே மீண்டும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ​

இத்தகைய செயல்பாடுகள் விஜய் சங்கரின் தேர்வுகள் மற்றும் அணியில் அவரது இடத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பி, அவருக்கு மட்டும் எப்படி வாய்ப்பு கிடைக்கிறது என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.

Take a Poll

நேற்றும் சொதப்பல்

நேற்று சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று எல்லாமே மிக மோசமாக இருக்காது. முக்கியமாக சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரச்சின் ரவீந்திரா, தேவன் கான்வே, ருத்துராஜ், துபே என்று டாப் ஆர்டர் மொத்தமாக சரிந்தது. மிடில் ஆர்டர் ஜடேஜாவும் மோசமாக சொதப்பினார். பவுலிங்கில் பதிரானா, நூர் தவிர மற்ற எல்லோரும் மிக மோசமாக சொதப்பினர்.

சிஎஸ்கே தோல்வி

நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. முதலில் இறங்கிய டெல்லி அணி 183/6 (20) ரன்கள் எடுத்தது. கே. எல் ராகுல் 77 ரன்கள் எடுத்து அசால்ட்டாக சிஎஸ்கே அணிக்கு பிரஷர் போட்டார். அவரை அடுத்து இறங்கிய சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் சீட்டு கட்டு போல சரிந்தது. விஜய் சங்கர் மட்டும் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கரும் இதில் ஸ்பீடு எடுக்காமல் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார். இன்னொரு பக்கம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய தோனி 26 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்கள் கூட எடுக்காத நிலையில் சிஎஸ்கே அணி மோசமாக படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 4 போட்டிகளில் முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் வரிசையாக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+