IPL 2025: 5 நாட்களே.. ஐபிஎல் தொடரை தொடங்கும் பிசிசிஐ.. 3 நாட்களில் புதிய அட்டவணை வெளியீடு?
மும்பை: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் இன்னும் 5 அல்லது 6 நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மீண்டும் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதல் அதிகரித்திருந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதேபோல் ஐபிஎல் தொடர் இல்லாததால், வீரர்கள் அனைவரும் சொந்த ஊர் புறப்பட்டுவிட்டனர்.

இதனால் திட்டமிட்டபடி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை வாய்ப்பில்லை என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இரு நாடுகளில் சண்டையை நிறுத்தி கொள்வதென ஒப்புக் கொண்டு அறிவித்துள்ளனர். இதனால் எல்லையில் நீடித்து வந்த பதற்றம் குறைந்து இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் ரசிகர்களின் அடுத்த கேள்வியாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்போதும் தொடங்கும் என்பதே இருந்து வருகிறது. இதுகுறித்து ஐபிஎல் சேர்மேன் அருண் துமால் பேசுகையில், தற்போது சண்டை முடிவுக்கு வந்துவிட்டது. இதன்பின் உடனடியாக ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்களை பார்க்க வேண்டும். உடனடியாக தொடங்க வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் மைதானங்கள், தேதிகள் ஆகியவற்றை முடிவு செய்ய வேண்டும். அதேபோல் ஐபிஎல் நிர்வாகம் மட்டும் எடுக்க வேண்டிய முடிவு அல்ல இது. பங்குதாரர்கள், அணிகளின் உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள் என்று அனைவரும் சம்பந்தப்பட்ட விஷயம் இது. அதனால் கூட்டாக ஆலோசித்து, மத்திய அரசுடன் விரிவாக கேட்டறிந்த பின்னரே முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே மே 15 அல்லது மே 16ஆம் தேதியில் ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்குள் வெளிநாட்டிற்கு சென்ற வீரர்களை மீண்டும் திரும்ப அழைக்கவும், புதிய அட்டவணையை தயார் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் மே 26ஆம் தேதிக்கு மேல் ஐபிஎல் தொடரை நடத்த முடியாது என்பதால், ஒரு நாளில் 2 போட்டிகளை அதிகளவில் நடத்த வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications