அணிக்குள் மோதல்.. ருத்துராஜ் காயம் பொய்யா? பிசிசிஐயின் அந்த ரூல்ஸ் நினைவிருக்கா? சிஎஸ்கே சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து ருத்துராஜ் தற்காலிகமாக விலகி உள்ளார். அவர் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்தும் விலகி உள்ளார். இதையடுத்து ருத்துராஜ் காயம் உண்மையானதா என்ற கேள்விகள் வைக்கப்படுகின்றன.

அதாவது தோனி தற்போது கேப்டன் ஆகி உள்ளார். ருத்துராஜ் சரியாக கேப்டன்சி செய்யவில்லை . இதனால் தோனியை கேப்டன் ஆக்குவதற்கு வசதியாக ருத்துராஜ் காயம் என்று பொய் சொல்லிவிட்டார். அணிக்குள் மோதல் நடக்கிறது. அதனால் ருத்துராஜ் வெளியேறி உள்ளார் என்றெல்லாம் வாதம் வைக்கப்படுகிறது.

IPL 2025 CSK

ஆனால் ருத்துராஜ் இப்படி காயத்தை பொய்யாக காட்ட முடியாது. இதற்கு என்றே ஒரு பிசிசிஐ விதி உள்ளது. ருத்துராஜ் பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள வீரர் . இதனால் காயத்திற்கு பின் 2 மாதங்களுக்குள் அவர் காயம் தேசிய கிரிக்கெட் அகாடமியில் கூற வேண்டும் .

அதை அங்கே அவர்கள் ரெக்கார்ட் செய்து உண்மையான காயமா.. பொய்யா என்று பிசிசிஐ இடம் தெரிவிப்பார்கள். பின்னர் அவரின் மருத்துவ, பயிற்சி செலவிற்கு பிசிசிஐ ஒப்புதல் அளிக்கும். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து காயத்தில் இருந்து மீள்வார்.

அந்த வகையில் ருத்துராஜ் விரைவில்.. பெரும்பாலும் ஐபிஎல் முடிந்து கிரிக்கெட் அகாடமி செல்வார். இதனால் அவர் காயம் என்றுய் பொய் சொல்ல முடியாது. அதோடு அவர் இந்த சீசன் முடியும் வரை அணியுடன் இருப்பார் என்பதால் அணியிலும் அவருக்கு பிரச்சனை இல்லை என்பது உறுதியாகிறது.

இந்த சீசன் முழுக்க ருத்துராஜ் மிக மோசமாக ஆடி உள்ளார். சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் இதற்கு முக்கியமானகாரணமாக மாறி உள்ளார். அவர் பேட்டிங் ஆர்டரை மாற்றியது இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். அவர் இங்கே சுயநலமாக முடிவு எடுத்துள்ளார். அவர் தற்போது ஓப்பனிங் இறங்காமல் ஒன் டவுன் இறங்குகிறார்.

ஓப்பனிங் இறங்கி ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்து சாதனை எல்லாமே படைத்துள்ளார். ஆனால் இந்த முறை ஒன் டவுன் இறங்குகிறார். இதற்கு காரணம் இந்திய அணியில் ஓப்பனிங் ஸ்பாட் முழுமையாக உள்ளது. ஆனால் ஒன் டவுன் இறங்க எதிர்காலத்தில் இடம் கிடைக்கும். அணியில் வாய்ப்பு கிடைக்கும்.

இதனால் எதிர்காலத்தில் இடம் கிடைக்கும் என்பதால்.. இந்திய அணிக்காக சிஎஸ்கேவை காவு வாங்கி வருகிறார். இந்த முறை அணியின் மீட்டிங்கிலும் ஒன் டவுன்தான் இறங்குவேன் என்று அவர் உறுதியாக அறிவித்ததாக கூறப்படுகிறது. அதாவது ஓப்பனிங் இறங்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தது கூறப்படுகிறது.

ரெக்கார்ட் என்ன?

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். பெங்களூருக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 4 பந்துகளில் 0 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தானுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். டெல்லிக்கு எதிரான நான்காவது போட்டியில் 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார். நேற்று பஞ்சாபிற்கு எதிரான ஐந்தாவது போட்டியில் 3 பந்துகளில் 1 ரன்கள் எடுத்தார்.

அவர் ஒன் டவுன் இறங்கி எடுத்த ஸ்கோர்கள் இவை. 3 போட்டிகளில் மோசமாக சொதப்பி உள்ளார். அவர் ஓப்பனிங் இறங்குவதே அணிக்கு பலம். ஆனால் ஒன் டவுன் இறங்குவதில் பிடிவாதமாக இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+