ஆன்ஃபீல்ட் முடிவுகள் எல்லாம் மோசம்! ருத்துராஜ் மீது பாய்ந்த சிஎஸ்கே நிர்வாகம்! ஹோட்டலில் திக் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேப்டன் ருத்துராஜின் ஆன்ஃபீல்ட் முடிவுகளை சிஎஸ்கே நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக கடந்த 3 போட்டிகளாக அவர் களத்தில் எடுத்த முடிவுகளை அணி நிர்வாகம் ரசிக்கவில்லையாம்.

சிஎஸ்கே அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் ஒரு மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. சிஎஸ்கே இதே வழியில் ஆடினால் அது அணிக்கு சரிப்பட்டு வராது.. இதேபோல் தொடர் தோல்விகளை சந்திக்கும் பட்சத்தில் கேப்டன்சி மாற்றம்தான் சரியாக இருக்கும் என்று அணி நிர்வாகம் சார்பாக ஆலோசனை செய்யப்பட்டு உள்ளதாம். அடுத்த கேப்டனாக வருவதற்கு அஸ்வினுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

IPL 2025 CSK

கேப்டனாக ருத்துராஜ் செய்யும் தவறுகள்

சிஎஸ்கே ஆட்டங்களில் ஒரு கேப்டனாக ருத்துராஜ் நிறைய தவறுகளை செய்தார். கேப்டனாக பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி பீல்டர் செட்டப் வரை பலவற்றில் கேப்டன் ருத்துராஜ் சொதப்பினார். பவர் பிளேவை அஸ்வின் சரியாக போடுவது இல்லை என்பதால் மேட்சில் பவர் பிளேவில் அவரை கொண்டு வரவில்லை.

அது சரியான முடிவு என்று பார்த்தால்.. அதற்காக வேறு ஸ்பின் பவுலரையும் பவர் பிளேவிலும் கொண்டு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். நூரை களமிறக்கி டெஸ்ட் செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. முகேஷ் சவுத்திரி மீண்டும் மீண்டும் மோசமாக பவர் பிளேவில் வீசியும் அவருக்கு 3 ஓவர்களை கொடுத்தார்.

குறைந்தபட்சம் 16 ஓவர்களில் ஸ்பின் ஓவர் கோட்டாவை முடிக்க முடியவில்லை. முகேஷுக்கு 2 ஓவர்கள் மட்டும் தொடக்கத்தில் கொடுத்து ஸ்பின் பவுலர்களை முன்பே இறக்கி கோட்டாவை முடித்து இருந்தால் கடைசியில் முகேஷுக்கு கூடுதல் ஓவர் கொடுக்க வேண்டி இருக்காது. ஆனால் அவர் போட்ட 19வது ஓவரில் தேவையின்றி சிக்ஸ், பவுண்டரி சென்று ஆட்டம் மாறியது. ருத்துராஜ் செய்த தவறால் கடைசி 4 ஓவர்களில் தரமான பவுலிங் போட சரியான பவுலர்கள் இல்லாத நிலை இருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் ஜடேஜா போன்றவர்களை கூட 4 ஓவர்கள் போடாமல் நிறுத்தியது மோசமான முடிவாக பார்க்கப்படுகிறது.

அஸ்வின் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே கொஞ்சம் சுமாராக ஆடினார். 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். அதோடு 31 ரன்கள் கொடுத்தார். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் எடுபடவில்லை. மிக மோசமான பவுலிங்கை அவர் வீசினார். பெங்களூருக்கு எதிரான மேட்சில் 2 ஓவர் வீசியவர் 22 ரன்களை கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் இன்னும் மோசம் ஆனது. 4 ஓவரில் 46 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். இதில் எந்த போட்டியிலும் அவரின் பேட்டிங் சரியாக இல்லை. மிக மோசமாகவே இருந்தது. ருத்துராஜ் அவரை அணியில் எடுத்தது தவறாக பார்க்கப்படுகிறது.

ஆஃப் ஸ்பின்னை தவிர எல்லாம் போடும் அஸ்வின்.. இது சரிப்பட்டு வராது.. ரட்சகனாய் வரும் அன்ஷுல் காம்போஜ் முக்கியமாக அவர் போடும் ஆப் ஸ்பின் சரியாக இல்லை. அதிகமாக கேரம் பால் போடுகிறார். முக்கியமாக பவர் பிளேவை சொதப்புவதே அவர்தான். பேட்டிங்கிலும் சரியாக ஆடுவது இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இதன் காரணமாக கேப்டன் ருத்துராஜின் ஆன்ஃபீல்ட் முடிவுகளை சிஎஸ்கே நிர்வாகம் விரும்பவில்லை ன்று கூறப்படுகிறது. முக்கியமாக கடந்த 3 போட்டிகளாக அவர் களத்தில் எடுத்த முடிவுகளை அணி நிர்வாகம் ரசிக்கவில்லையாம்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+