இதுக்குத்தான் இந்த வலுவான அணியா? பாதி சீசனில் வெளியேறும் தோனி? பக்காவான டீமை எடுக்க காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி பல இளம் வீரர்களை எடுப்பதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

நேற்று நடந்த சிஎஸ்கே ஏலத்தில் பல முக்கியமான இளம் வீரர்கள் அணியில் எடுக்கப்பட்டனர். முக்கியமாக ரச்சின் ரவீந்திரா, சமீர் ரிஸ்வி போன்ற வீரர்களை எடுத்துள்ளது. சிஎஸ்கேவில் ஏற்கனவே அம்பதி ராயுடு போன்ற மூத்த வீரர்கள் வெளியேறி உள்ள நிலையில்தான் தற்போது இளம் வீரர்கள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

 IPL auction 2024: Is Dhoni planning leave captaincy half a way? What is the CSK strategy for Jadeja?

சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்ட வீரர்கள்: சிஎஸ்கே அணியால் பின்வரும் வீரர்கள் எடுக்கப்பட்டு உள்ளனர்.

ரச்சின் ரவீந்திரன்
ஷர்துல் தாக்கூர்
டேரில் மிட்செல்
சமீர் ரிஸ்வி
முஸ்தாபிசுர் ரஹ்மான்
அவனிஷ் ராவ் ஆகியோர் எடுக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே அணியில் உள்ள வீரர்கள்: சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.

வெளியேறும் தோனி: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த சீசன் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. இந்த சீசனில் பாதியிலேயே அவர் ஓய்வுபெற வாய்ப்பு உள்ளது. இந்த சீசனில் அவர் முழுமையாக ஆடினாலும் கேப்டனாக சில காலமே இருப்பார் . அதன்பின் கேப்டன்சியை ஜடேஜாவிடம் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இதனால் ஜடேஜா கேப்டன் ஆகும் போது அவருக்கு ஏற்ற வீரரக்ள் இருக்க வேண்டும். தோனி ஸ்டைலில் மூத்த வீரர்கள் இல்லாமல்.. ஜடேஜாவிற்கு ஏற்றபடி இளம் வீரர்கள் அணியில் இருக்க வேண்டும். ஜடேஜாவிற்கு ஏற்றபடி புதிய செட் அணிக்குள் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்தே சிஎஸ்கே அணி இந்த முறை முக்கியமான இளம் வீரர்களை எடுத்து உள்ளது.

ஜடேஜா கேப்டன் ஆகி.. அவரால் தோனி ஸ்டைலில் பழைய வீரர்களை வைத்து கேப்டன்சி செய்ய முடியாது. மாறாக அவருக்கு இளம் வீரர்கள் தேவை. அதை மனதில் வைத்தே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணி இளம் வீரர்களை களமிறக்கி உள்ளது.

ஏலம் விடப்பட்ட முக்கிய வீரர்கள்: ஆஸ்திரேலியா அணி நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டுள்ளார் அதேபோல் ஆஸ்திரேலியா அணி கேப்டன் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதுஷங்கா ரூ.4.6 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார். இந்திய இளம் வீரர் சிவம் மாவி ரூ.6.4 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார் . வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் ரூ.11.50 கோடிக்கு ஆர்சிபி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+